கத்தார் என்று ஒரு அரபு நாடு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய GDP அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு இது தான். இதன் பரப்பளவு தமிழ்நாட்டைக் காட்டிலும் 11 மடங்கு குறைவு. 335 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வெளிநாடுகளில் மட்டும் முதலீடு செய்துள்ளது. இந்த நாட்டில் வருமான வரி இல்லை. வெளிநாட்டில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் கூட மருத்துவம் கிட்டத்தட்ட இலவசம். இந்த நாட்டை Black Panther படத்தில் வருகிற வக்காண்டா […]
அரசியல்
இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அவை தரமாக இருக்க வேண்டாமா?
பதில்: 2006ல் தந்த கலைஞர் டிவி 12 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடையில் விற்கிற டிவி ஏதாவது இத்தனை ஆண்டுகள் warranty தருகிறதா? இல்லை, ரிப்பேரே ஆகாத மிக்சி, கிரைண்டர் யாராவது விற்கிறார்களா? ஆனால், தரம் இல்லை தரம் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைப்பீர்கள். சமச்சீர் கல்வி விசயத்திலும் இது தான் நடந்தது. பார்க்க… முகநூல் உரையாடல்
வீட்டில் அரசியல் பேசுவோம்.
கேள்வி: என் பிள்ளைகளுக்குச் சாதி என்றால் என்ன என்றே தெரியாது. இது நல்லது தானே? பதில்: இல்லை. நிறவெறி என்றால் என்ன என்றே என் குழந்தைக்குத் தெரியாது என்று ஒரு கருப்பினத்தவர் கூட சொல்ல மாட்டார். உங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருந்தால் கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கும் அதை ஊட்டி வளர்க்க வேண்டும். சொன்னால் புரியாது என்றால், இன்றைய பிள்ளைகள் சூட்டிகையானவர்கள்; இணையத்தில் உள்ள நல்ல வீடியோக்களை அறிமுகப்படுத்தலாம். நம் பெற்றோர்கள் அன்று நமக்கு அரசியலை அறிமுகப்படுத்தாமல் விட்டதன் […]
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை. முதல் 2 நிமிடங்கள் வரும் Highlights மட்டுமாவது பாருங்கள். அதற்குப ்பிறகு முழு உரையையும் நீங்களே பார்த்து விடுவீர்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது?
கேள்வி: NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது? வர்க்கம் தானே இவற்றில் வெற்றி பெறத் தடையாக இருக்கிறது? பதில்: தமிழகமே எதிர்த்த நீட் தேர்வை ஆதரித்த ஒரே சங்கம் தமிழகப் பார்ப்பனர்கள் சங்கம். வர்க்கம் தான் இந்தியாவின் பிரச்சினை என்றால், ஒரு ஏழைப் பார்ப்பனர் பாதிக்கப்படுவாரோ என்ற அக்கறை கூட இல்லாமல் தகுதி, தரம், திறமை என்ற பெயரில் நடத்தப்படும் நவீன தீண்டாமைகள் தான் இத்தகைய வடிகட்டும் நுழைவுத் தேர்வுகள். […]
நீங்கள் விட்டுக் கொடுத்த பணத்தில் தான் பட்டேலுக்குச் சிலை
இலவசம் வேண்டாம் என்று Gas சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்த அறிவாளிகள் யாராவது இருந்தால் மறுமொழிகளில் வந்து ஒப்புக் கொள்ளுங்கள். நீங்கள் விட்டுக் கொடுத்த பணத்தில் தான் பட்டேலுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் 🙂 Meme idea: Gas cylinder, train ticket மானியத்தை விட்டுக் கொடுத்தா நாடு நல்லா இருக்கும்னு ஒரு கேடி சொல்வான். நம்பாத! ஆதாரம் பார்க்க… முகநூல் உரையாடல்
முட்டை – ஊட்டச் சத்து
முட்டை 5 ரூபாய் தான். ஆனால், அந்த ஊட்டச் சத்து கூட ஏழைக்குக் கிடைக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியது உன்னை ஆள்பவனின் சாதி தான். இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களை சோப்ளாங்கிகளாக வைத்திருப்பது தான் பாஜகவின் சாதனை. பார்க்க… முகநூல் உரையாடல்
ஊழல் குறைந்த ஆட்சி நடப்பதும் மக்களாட்சியில் தான்
நம் மக்கள் தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவது தான் ஊழல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்த தேனை எவன் உண்கிறான் என்பதைக் கேள்வி கேட்க மறந்து விட்டார்கள். இந்தியாவில் மக்களாட்சி மலரும் முன், அனைத்து ராஜாதி ராஜாக்கள் முதற்கொண்டு பிரிட்டிஷ் அரசு வரை மக்களின் உழைப்பை அனைவரும் உறிஞ்சித் தின்றதே ஒரு மாபெரும் ஊழல் தான். ஆனால், அப்போது மந்திரிகளோ அதிகாரிகளோ ஊழல் செய்யவில்லை என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். ஏன் எனில், இந்த மன்னர்களிடம் வேலை […]
திராவிடப் பொருளாதாரம்.
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதா மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதா என்பது அறிவாளிகள் கேள்வி. பசித்தவனுக்கு மீனையும் பசியாறியவனுக்கு மீன் பிடிப்பதற்கான பயிற்சியையும் பயின்றவனுக்கு மீன் பிடிப்பதற்கான கருவிகளையும் தருவது தான் திராவிடப் பொருளாதாரம். பார்க்க… முகநூல் உரையாடல்
வேறு என்ன இலவசமாகத் தரலாம்?
கேள்வி: இலவச பஸ் பாஸ், மிதிவண்டி போன்று கல்விக்கு உதவும் அத்தியாவசிய திட்டங்களை எல்லாம் எதிர்க்கவில்லை. மிக்சி, கிரைண்டர், டிவி எல்லாம் ஆடம்பரம் தானே? அவற்றுக்குச் செலவிடத் தான் வேண்டுமா? பதில்: அம்பானி மனைவி 5 நட்சத்திர விடுதியில் உண்பது ஆடம்பரம். ஆனால், அம்பானி மனைவி சமையலுக்கு மிக்சியும் கிரைண்டரும் பயன்படுத்துவது அத்தியாவசியம். ஆட்டாங்கல்லுக்குச் செலவிடும் நேரத்தில் அவர் பயனுள்ள இன்னும் பல வேலைகளைச் செய்ய முடியும். நம் அம்மாக்களுக்கும் இதே வசதிகள் கிடைத்தால் அவர்கள் நேரத்துக்கு […]