கேள்வி: இலவசங்கள் கூடாது என்றில்லை. அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் அடையாளம் கண்டு தர வேண்டும் என்கிறார்களே? பதில்: இலவசங்களை விடுங்கள். மோடி அரசு மருத்துவக் காப்பீட்டுக்குக் குறி வைக்கிற அழகை இணைத்துள்ள செய்தியில் படிக்கலாம். அதாவது, Two wheeler, Landline phone இருந்தால் வீட்டில் யாராவது ஒருவர் 10,000 ரூபாய் சம்பாதித்தால் காப்பீடு கிடையாதாம். இதற்குப் பதில் “கூடை வைச்சிருக்கங்களுக்கு எல்லாம் பெட்ராமாக்ஸ் லைட்டு இல்லை”ன்னு சொல்லிட்டுப் போகலாம். இந்தக் கொடுமைக்கு தமிழ்நாட்டில் நன்றாக இருந்த கலைஞர் […]
அரசியல்
1920களின் நீதிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களின் வரலாறு
1920களின் நீதிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களின் வரலாறு. உங்களில் யார் இதில் ஒரு திட்டத்தில் கூட பயன் அடையவில்லையோ அவர்கள் கல் எறியுங்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.
Broken Windows Theory என்று ஒன்று உள்ளது. அதாவது, சில ரவுடிகள் உங்கள் வீட்டுச் சன்னல் கண்ணாடியை உடைக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து கொண்டோ போனால் போகிறா்கள் என்றோ விட்டால் மேலும் மேலும் கண்ணாடிகள் உடைந்து கொண்டே இருக்கும். அந்தத் தெரு வாழவே தகுதியற்றதாகி விடும். சிறிய ஒழுங்கீனங்களைத் தவிர்த்தால் தான் பெரிய குற்றங்கள் நிகழ முடியாமல் தவிர்க்க முடியும் என்கிறார்கள். திராவிடம் மீதான அவதூறுகளும் இப்படித் தான். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக […]
அரசு பள்ளிகளில் எத்தனையோ வசதிகள் தேவைப்படும் போது, ஆளுக்கு ஒரு கணினி தேவையா?
பதில்: சரி, நீங்கள் சுற்றி வளைத்து எங்கு வருவீர்களோ அதை நான் நேரடியாகவே சொல்கிறேன். படிக்கிற வயதில் மாணவர்கள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் porn பார்க்கும் வாய்ப்பை மடிக்கணினி தருகிறது என்பது தான் உங்கள் பிரச்சினை. Porn பார்க்கிற பிள்ளை அடுத்து என்ன செய்யும், யாரைக் காதலிப்பாள், எந்தச் சாதி ஆளைத் திருமணம் செய்து கொள்வாள், இவர்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா, நம்ம பாரம்பரியம், Culture, பண்பாடு என்ன ஆகும் என்பது தான் உங்கள் கவலை. […]
விஜய்ணா ரசிகர்களைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இருக்கிறதா?
கேள்வி: விஜய்ணா ரசிகர்களைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இருக்கிறதா? இந்த முட்டாள்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பதில்: முட்டாள்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அறிவாளிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் என் கவலை. இயற்பியல், உயிரியல் போல அரசியலும் ஒரு அறிவியல் தான். அதை முறையாகப் பயின்றால் சரியான நிலைப்பாடு எடுக்கக் கூடிய எத்தனையோ அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் […]
இலவசத் திட்டங்கள் சரி. ஆனால், அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் கண்டறிந்து தரலாமே?
பதில்: ஒரு ஊரில் ஒரே ஒருவருக்குத் தான் போலியோ தாக்கும். அது யாரென்று நமக்குத் தெரியாது. அவரைக் காக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து தரத் தான் வேண்டும். புண்ணியம் வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் செய்கிறோம். பணக்காரன் எல்லாம் சாப்பிட வராதே என்று விரட்டி விடுகிறோமா? உறவினர், நண்பர் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று தான் திருமணத்தில் விருந்து வைக்கிறோம். உணவு வீண் ஆனாலும் பரவாயில்லை என்று […]
எங்கள் தலைவர்கள் பொருளாதார மேதைகள்
பல கணித மேதைகள் எந்த நிறுவலும் இன்றி மொத்தமாக பல தேற்றங்களை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவற்றை நிறுவுவது தான் பல ஆய்வு மாணவர்களின் வேலையாக இருக்கிறது. அது போல் திராவிடப் பொருளாதாரம் என்பது பல்கலைக்கழககங்களில் ஆராய்ச்சி செய்து, காரல் மார்க்ஸ் போல் புத்தகம் எழுதி வைத்து நிறுவியது அல்ல. இது மக்களிடம் தோன்றிய தலைவர்கள் மக்களுக்காக உருவாக்கிய பொருளாதார மாதிரி. நூறு ஆண்டுக்கு முன்பு நீதிக் கட்சி மாணவர்களுக்கு உணவு தந்து படிக்க […]
உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?
உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்? எங்கள் இளமையில் வீட்டில் கடிகாரம் இல்லை. அதிகாலை 5 மணிக்கு எழுந்து தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்றால் கோழி கூவும் சத்தத்தைக் கேட்டு எங்கள் அம்மா எழுப்பி விடுவார். அந்த வீணா போன கோழி 2 மணிக்குக் கூவினாலும் விழித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்போம். இத்தனைக்கும் எங்களிடம் நன்செய், புன்செய் நிலங்கள், கேணி, மாடுகள் இருந்தன. ஆனால், ஒரு கடிகாரம் வாங்கக் கூட காசு […]
திராவிட அரசியல் தத்துவத்திற்கு எதிராக
73% மக்கள் ஆதரிக்கும் திராவிட அரசியல் தத்துவத்திற்கு எதிராக, ஒரு சீட்டு கூட தனியே வெல்ல வக்கில்லாத சக்திகள் தான் இந்த நாட்டின் அறிவுஜீவிகள் என்றால், இவர்கள் மக்களாட்சியை ஆதரிக்கிறார்களா இல்லை சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்களா? இல்லை, திராவிடம் வீழ்ந்து ஆரியம் வென்று மீண்டும் சாதிய அடிமைத்தனம் மேலோங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பார்க்க… முகநூல் உரையாடல்
திமுக ஏன் இதைச் செய்யவில்லை? அதைச் செய்யவில்லை?
பதில்: நேரு தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். காங்கிரசு 1952-71 தொடர்ச்சியாக 5 முறை ஆண்டிருக்கிறது. 6 முறை தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 4 முறை கூட்டணி ஆட்சிகளைச் செலுத்தி இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நாட்டின் நிறுவனங்களைக் கட்டமைக்க இந்தத் தொடர்ச்சியும் வலுவான அடித்தளமும் முக்கியம். ஒரு அரசே போனாலும், இந்த நிறுவனங்கள் தான் நாட்டைக் கட்டிக் காக்கும். இப்படி எல்லாம் கட்டமைத்த நாட்டைத் தான் மோடி நான்கே ஆண்டுகளில் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறார். முதல்வர் ஆன […]