இது வரை உலகில் ஒரு Communist நாடு கூட இல்லை. நாம் Communist நாடுகள் என்று நினைக்கும் சீனா, கூபா எல்லாம் Socialist நாடுகள். உண்மையான Communism மலரும் போது, உலகம் ஒரே குடையின் கீழ் இருக்கும். நாடு என்ற ஒன்றே இருக்காது” – நேற்றைய முகநூல் அரசியல் உரையாடல். பார்க்க… முகநூல் உரையாடல்
அரசியல்
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா என்கிறார்கள். தனியாரை ஒழித்தால் ஒரே தரத்தில் கல்வி கிடைக்கும். ஆனால், எல்லாருக்கும் கல்வி கிடைக்காது. ஆம், காசு இருந்தால் கூட கல்வி கிடைக்காது. இது என்ன கதையாக இருக்கிறதே என்கிறீர்களா? இலங்கையில் உயர் கல்வித் துறை எப்படிச் செயற்படுகிறது என்று அங்குள்ள நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். இன்று இந்தியாவிலேயே அதிகம் மக்கள் கல்லூரிக் கல்வி பெறுவதில் தமிழகம் தான் முதலிடம். வழக்கம் போல, திராவிடத்தின் இந்தச் சாதனையையும் குற்றமாக்கி, […]
உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
கேள்வி: உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன? பதில்: ஏதேனும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அந்தச் சாதியின் வேட்பாளர்கள் ஒருவரைக் கூட ஒரு பெரிய கட்சி தேர்தலில் நிறுத்தவில்லை என்று கொள்வோம். எங்கள் சாதி ஆளை நிறுத்துகிற கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்பது சாதி வெறி. எங்கள் சாதியில் இத்தனை இலட்சம் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இத்தகைய துயரங்களைப் படுகின்றனர். அவர்களின் துயர் துடைக்க இத்தகைய சட்டங்களும் திட்டங்களும் தேவை. […]
இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?
கேள்வி: இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பதில்: தலைவர் கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்க எவ்வளவு பணம் வாங்கினாரோ அவ்வளவு பணம்! பார்க்க… முகநூல் உரையாடல்
அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
கேள்வி: அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பதில்: ஆம், அதிமுக திராவிடக் கட்சி தான். ஆனால், ஜெயாவும் எம்ஜிஆரும் இருந்த வரை மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமே என்ற பயமாவது அவர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் கட்சி தலையில்லாத முண்டமாக கண்டவர்களை எல்லாம் காவு கேட்கிறது. மீண்டும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற […]
அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது
அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது. ஆகவே, அரசியல் பேசாதீர்கள் என்று ரொம்ப நாளாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரங்கராஜ் பாண்டே போன்றோர் ஒரு படி மேலே போய் அரசுக்கு எதிரான கருத்துகள் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறது, ஒரு டுவீட்டுக்கு 10 ரூபாய் பணம் கட்டுவது போல் மாற்ற வேண்டும் என்று எல்லாம் கதறுகிறார்கள். இவை எல்லாமே இணையத்தில் மோடி எதிர்ப்பு கருத்துகள் பரவுவதைத் தடுக்கவே. Non-veg சாப்பிடுவதைத் தடுக்க முடியாவிட்டால் Non-vegல் விசம் இருக்கிறது என்று […]
அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான்.
அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான். கடைசியில் யாருக்கு சீட் கிடைத்தது? ஐப்போனும் காருமாக மருத்துவக் கல்லூரி நுழைவுக்கு மாணவர்கள் வந்து இறங்கினார்கள். அதே கதை தான் இந்த 10% பிராடுக்கும். ஏழைக்காக ஒரு திட்டம் என்றால் அது நேரடியாக பணமாகவே அவர்கள் கையில் கிடைக்க வேண்டும். ஆனால், அப்படிக் கொடுக்கிற திராவிட அரசுகள் அவர்களைச் சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பான். ஏழைகளுக்கு என்று சொல்லி சுற்றி வளைத்துக் கொண்டு […]
கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா?
கேள்வி: கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா? பதில்: கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். […]
அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை?
கேள்வி: அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை? பதில்: கலைஞர் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது தான் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். கலைஞரை நீங்கள் எவ்வளவு சுயநலம் மிக்க, சமூக அக்கறை அற்ற, பதவி வெறி பிடித்த தலைவர் என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருவர், தன் சொந்த மகளைக் கூடவா ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறையில் கிடந்து வாட விடுவார்? அரசியல் என்பது […]
திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை?
கேள்வி: திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை? பதில்: நீங்கள் சொல்வது பொய். திராவிடக் கட்சிகள் பல தலித் வேட்பாளர்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். பெயர்களில் உள்ள சாதியை ஒழித்தது திராவிட இயக்கம் என்பதால், இங்கு தான் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதி என்றே பலருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், கட்சி பார்த்துத் தான் வாக்களிக்கிறார்கள். தனித்தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களைக்கூட SC/ST என்று தான் தெரிந்து […]