கேள்வி: அடித்தட்டு மக்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா? பதில்: இந்தியாவில் தொலைகாட்சிகள் வைத்திருப்போர் 47% மட்டுமே. GDPல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மராட்டியத்தில் இது 56% தான். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு இதனை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடித்து விட்டது. தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் குடும்ப வன்முறை குறைகிறது, வாழ்க்கைத் தரம் கூடுகிறது என்று பல பல சமூக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. […]
பொருளாதாரம்
இது தான் திராவிடப் பொருளாதாரம்
ஒரு உணவு சமைக்கிறீர்கள். சமைக்க எவ்வளவு செலவு என்று மட்டும் பார்த்தால் நீங்கள் அடிமட்ட ஏழை. சமைக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் நடுமட்ட ஏழை. சமைத்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் பணக்காரர். அடிமட்ட ஏழைக்கு விலையில்லா அரிசி, சத்துணவு, குறைந்த விலையில் அம்மா உணவகம் கொடு. நடுமட்ட ஏழையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நேரத்தை மிச்சமாக்க மடிக்கணினி, தொலைக்காட்சி, மிதிவண்டி, ஸ்கூட்டி, மிக்சர், கிரைண்டர், […]