20 வயது தாண்டியும் தரையில் பாயில் படுத்துத் தான் தூங்கினேன், சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன், தீபாவளிக்கு மட்டும் தான் இட்லி சுடுவோம், வருசத்துக்கு ஒன்றிரண்டு முறை எங்காவது பயணம் போகும் போது தான் Hotel போய் சாப்பிடுவோம், திருவிழா கடையில் மட்டும் தான் பொம்மை வாங்குவோம், பிறந்த நாள், தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி வாங்குவோம், என்பதை எல்லாம் என் மகள்களால் நம்ப முடியவில்லை. இனி நம்புவார்கள். பழைய ஏழ்மையான இந்தியாவை மோடிஜீ மீட்டெடுத்துவிட்டார்! பார்க்க… முகநூல் […]
பொருளாதாரம்
Ashok Leyland தொழிற்சாலைகள் மாதம் பாதி நாள் மூடல்.
லாரி விற்பனை சரிவு. Ashok Leyland தொழிற்சாலைகள் மாதம் பாதி நாள் மூடல். ஆலை முதலாளிகள், தொழிலாளிகளைக் கட்டி அணைத்து, தடவி, ஆறுதல் சொல்லும் சடங்கு, நாளை மாலை 6 மணிக்கு ஊர் நடுத்தெருவில் நடைபெறும் என்று சார்ந்தோர் அனைவருக்கும் அறிவித்துக் கொள்கிறோம்.
அரசு நிறுவனமான MTNL ல் இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.
அரசு நிறுவனமான MTNL ல் இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. BSNLல் இன்னும் போன மாதச் சம்பளம் தர முடியவில்லை. நல்ல Deal தருகிறோம், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு போகிறீர்களா என்று 80,000 ஊழியர்களைக் கேட்டிருக்கிறார்கள். (தொடர்புடைய செய்திகள் மறுமொழியில்) https://telecom.economictimes.indiatimes.com/news/staff-salaries-due-for-2-months-trying-sincerely-to-release-wages-at-earliest-mtnl-cmd/70994577 https://www.businessinsider.in/bsnl-which-is-yet-to-pay-august-salaries-wants-to-give-an-attractive-retirement-package-to-80000-employees/articleshow/70988909.cms?fbclid=IwAR1qr6NJ3fUxksQvuQ-S445udBDudyH4YVFPbx5RK-dYl7RDRgrOYtShQ5M பார்க்க… முகநூல் உரையாடல்
ரிசர்வ் வங்கியின் முதலீடு
நம்முடைய ரிசர்வ் வங்கியில் இன்றைய தேதிக்கு 430 பில்லியன் டாலர் அளவுக்குச் சொத்து இருக்கிறது. இந்தச் சொத்துகளின் அடிப்படையில்தான் பணம் அச்சடிக்கிறார்கள். இந்தச் சொத்து தங்கமாக, அன்னிய நாட்டுப் பணமாக, அரசு பத்திரங்களாக இருக்கும். இந்த 430 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு நிலையாக இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள். அதன் மதிப்பு சில வருடங்களில் 1.25 கோடி ரூபாயாக மாறுகிறதென வைத்துக்கொள்வோம். இதே மதிப்பு போன ஆண்டு […]
இந்திய பட்ஜெட்
“7 லட்சம் கோடி கடன் வாங்கி 6.6 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டுவோம்”: இந்திய பட்ஜெட்———————————————————- இந்த பட்ஜெட்டினால், வருமான வரியில் 15 ரூபாய் 50 காசு குறையும், கார்ப்பரேட் நிறுவனங்கல் கூடுதலாக 26 ரூபாய் வரி செலுத்துவார்கள் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், நிதி நிலை கடந்த ஐந்தாண்டுகளாக மிக மோசமடைந்திருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் சொல்வதுபடி பார்த்தால், படுத்தபடுக்கையாக இருக்கிறது நிலைமை.————————————– இந்த நிதிநிலை […]
பொதுவாக நம்ம ஆட்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு.
பொதுவாக நம்ம ஆட்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. 1. நாம் தவறே செய்திருக்க மாட்டோம். எதிரிக் கட்சிகள் அதைக் குற்றமாக்கும். நாம் பதிலே சொல்லாமல் இருப்போம். (ஈழம், 2G 2011) 2. அப்புறம், கொஞ்சம் முன்னேறி விளக்கம் கொடுப்போம். இது தடுப்பாட்டம். (2016) 3. காலம் போன காலத்தில் திராவிட இயக்கத்தின் அருமை புரிந்து பாராட்டிப் பேசுவோம். இது வாக்காக மாறாது. (2018. கலைஞர் மறைவுக்குப் பின்) ஆனால், நாளும் ஆளுங்கட்சிகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் […]
ரிசர்வ் வங்கியின் உபரி பணம்
முன்னாள் RBI ஆளுநர் உர்ஜித் படேல் செல்லாக்காசு நடவடிக்கைக்கு கூட கையெழுத்து போட்டார். அவ்வளவு மோசமான முடிவுக்குக் கூட வேறு வழியின்றி தலையாட்டிய அவர், RBI பணத்தை அளவுக்கு மீறி அரசுக்குத் தர முடியாது என்றார். அரசின் கடும் நெருக்கடி தாங்காமல் பதவியை ராஜினாமா செய்தார். அப்படி என்றால் இப்போது சொருகியுள்ளது எத்தகைய ஆப்பு? செல்லாக்காசு நடவடிக்கையை முடிவின் தொடக்கம் என்றார் மன்மோகன் சிங். அநேகமாக இது interval என்று நினைக்கிறேன். Tea, coffee சாப்பிட்டு வரவங்க […]
கல்வி முக்கியம்!
இன்று பொருளாதாரம் சரியில்லை. படித்தவருக்கு வேலை இல்லை. வேலை இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் இல்லை. அதனால் படித்து என்ன பயன் என்கிறார்கள்! வேலை பெற தகுதி கொடுக்காத படிப்பு தேவையா என்கிறார்கள்! நாளையே பொருளாதாரம் நன்றானால், உடனே தேவைக்கு ஏற்ப ஒரே நாளில் பட்டதாரிகளை உற்பத்தி செய்ய முடியுமா? 1920களில் தொடங்கி பள்ளிக் கல்வி, ஆங்கிலக் கல்வி, அதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி என்று நாம் தயார் நிலையில் இருந்ததால் அல்லவா, 1990களில் பொருளாதாரம் தாராளமயமான போது […]
IT துறை உச்சத்தில் இருந்த போது ஒரு சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கில் கூட புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தார்கள்.
IT துறை உச்சத்தில் இருந்த போது ஒரு சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கில் கூட புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தார்கள். Projectஏ வந்து சேராவிட்டாலும் மாதக்கணக்கில் Benchல் தயார் நிலையில் வைத்து இருந்தார்கள். கல்லூரியில் படித்த பாடம் போதவில்லை என்று சொன்னாலும், அவர்களே மாதக் கணக்கில் பயிற்சி அளித்தார்கள். ஆனால், பொருளாதாரம் மந்தமானால், ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை பார்க்கிறவர்களைக் கூட திறமை போதவில்லை என்று வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மறந்தும், உங்களுக்குத் தகுதி இருக்கிறது தங்களிடம் தான் […]
நிதி பிரச்சனையால் ஆட்டம் காணும் தெற்கு ரயில்வே
லாலு ஊழல்வாதி என்றார்கள். ஆனால், அவர் அமைச்சராக இருந்த போது ரயில்வே துறை இலாபத்தில் இயங்கியது. இப்போது தென்னக ரயில்வேயில் துணி துவைக்கவே காசில்லை. சில ரயில்கள் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். https://tamil.goodreturns.in/news/2019/08/21/southern-railway-hit-by-unprecedented-severe-cash-crunch-015727.html?fbclid=IwAR283PscKHzq9x0LksYWiiPhWGE1U14NZlaMX3NmKLcrlMQfG8IG80Fkan4 பார்க்க… முகநூல் உரையாடல்