உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்? எங்கள் இளமையில் வீட்டில் கடிகாரம் இல்லை. அதிகாலை 5 மணிக்கு எழுந்து தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்றால் கோழி கூவும் சத்தத்தைக் கேட்டு எங்கள் அம்மா எழுப்பி விடுவார். அந்த வீணா போன கோழி 2 மணிக்குக் கூவினாலும் விழித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்போம். இத்தனைக்கும் எங்களிடம் நன்செய், புன்செய் நிலங்கள், கேணி, மாடுகள் இருந்தன. ஆனால், ஒரு கடிகாரம் வாங்கக் கூட காசு […]
திராவிடம்
அறிஞர் அண்ணாவின் 24 உரைகள்
அறிஞர் அண்ணாவின் 24 உரைகள். ஒலிப்பதிவாக. இது ஒரு தங்கப் புதையல். பகிர்வுக்கு நன்றி. Fuzail Ahmad பெரியார், கலைஞர், அண்ணா உரைகள் மிக அரிதாகவே இணையத்தில் கிடைக்கின்றன. வாழ்நாள் முழுதும் பேசித் தீர்த்தவர்களுக்கு இது மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். உங்களிடம் இவர்கள் உரைகள் இருந்தால் தயவு செய்து இணையத்தில் பதிவேற்றுங்கள். https://drive.google.com/drive/folders/1_p_EQhOY9owoKpRLK7tLaiakMEdRhfW1?fbclid=IwAR39Yqj_V1m5Stdag73KQ5eotVNuBQ7VLYZxluipxpnkAfUfO0ebJ18fhDU பார்க்க… முகநூல் உரையாடல்
நன்றாக எழுதுகிறீர்கள். தி.மு.க. சார்பு இல்லாமல் எழுதினால் இன்னும் உங்கள் கருத்துகள் நிறைய பேரைச் சென்றடையுமே?
பதில்: நான் வேலை பார்த்த அமெரிக்க நிறுவனத்தில் CEO உட்பட 300 பணியாளர்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் Clinton ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அது முதிர்ச்சியான மக்களாட்சி. இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், இராணுவத் தளபதிகள் கூட வலதுசாரி அரசியல் கருத்துகளைப் பரப்பி ஓய்வு பெற்ற பிறகு கூசாமல் அரசுப் பதவிகளைப் பெற்றுக் கொள்கிறர்கள். ஆனால், திராவிடம் மட்டும் ஏதோ தீண்டத்தகாத ஒரு கொள்கை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், திராவிட அரசியலைத் தனிமைப்படுத்துகிறார்கள். திராவிட அரசியலை […]
திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின
திராவிடக் கட்சிகள் எப்படி மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டின, திராவிடச் சித்தாந்தம் என்பது எப்படி மக்களை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை உண்மையிலேயே அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் Dravidian Years: Politics and Welfare in Tamilnadu. எழுதியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். நாராயணன். ** தமிழ்நாட்டில் சமூக நலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் சி.என். அண்ணாதுரை மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கி செயல்படுத்தப்படுவது வழக்கம். அண்ணா […]
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை. முதல் 2 நிமிடங்கள் வரும் Highlights மட்டுமாவது பாருங்கள். அதற்குப ்பிறகு முழு உரையையும் நீங்களே பார்த்து விடுவீர்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
தி.மு.க வை தாண்டி திராவிடத்தை நிலைப்படுத்தும் தேவை இருக்கிறதா?
கேள்வி: தி.மு.க வை தாண்டி திராவிடத்தை நிலைப்படுத்தும் தேவை இருக்கிறதா? பதில்: வாக்கரசியல் களத்தில் மட்டும் தான் தி.மு.க. இருக்கிறது. சமூகக் களத்தில் தி.க, மற்ற பெரியார் அமைப்புகள். அரசியலில் மட்டும் இடத்தைப் பிடிக்கவே நீதிக்கட்சி தொடங்கி நூறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. அதுவும் தமிழக அரசியல் அளவில் மட்டும் தான் என்பதால் முழுமையான தன்னாட்சி நிலை கிடையாது. கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தத்துவம், ஊடகம், ஆன்மிகம் , வணிகம் என்று இன்னும் பல களங்களில் திராவிடம் […]
NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது?
கேள்வி: NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது? வர்க்கம் தானே இவற்றில் வெற்றி பெறத் தடையாக இருக்கிறது? பதில்: தமிழகமே எதிர்த்த நீட் தேர்வை ஆதரித்த ஒரே சங்கம் தமிழகப் பார்ப்பனர்கள் சங்கம். வர்க்கம் தான் இந்தியாவின் பிரச்சினை என்றால், ஒரு ஏழைப் பார்ப்பனர் பாதிக்கப்படுவாரோ என்ற அக்கறை கூட இல்லாமல் தகுதி, தரம், திறமை என்ற பெயரில் நடத்தப்படும் நவீன தீண்டாமைகள் தான் இத்தகைய வடிகட்டும் நுழைவுத் தேர்வுகள். […]
முட்டை – ஊட்டச் சத்து
முட்டை 5 ரூபாய் தான். ஆனால், அந்த ஊட்டச் சத்து கூட ஏழைக்குக் கிடைக்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியது உன்னை ஆள்பவனின் சாதி தான். இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்களை சோப்ளாங்கிகளாக வைத்திருப்பது தான் பாஜகவின் சாதனை. பார்க்க… முகநூல் உரையாடல்
ஏன் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லித் தருகிறீர்கள்?
பதில்: 12 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் Selvakumar Ramachandranஉடன் பேசும் போது, “இந்தியர்கள் கூட சுவீடன் பல்கலைகளில் இலவசமாக உயர்கல்வி படிக்கலாம்” என்ற ஒரே ஒரு வரித் தகவலைச் சொன்னேன். பார்த்த வேலையை விட்டு அடுத்த விமானம் பிடித்து சுவீடனுக்கு வந்து விட்டார். இன்று அவர் முனைவர் பட்டம் பெற்று சொந்தமாகத் தொழில் நடத்துகிறார். அவர் இன்னும் 50 பேருக்காவது உயர் கல்வி பற்றி வழிகாட்டி இருப்பார். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் நன்றி […]
திராவிடப் பொருளாதாரம்.
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதா மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதா என்பது அறிவாளிகள் கேள்வி. பசித்தவனுக்கு மீனையும் பசியாறியவனுக்கு மீன் பிடிப்பதற்கான பயிற்சியையும் பயின்றவனுக்கு மீன் பிடிப்பதற்கான கருவிகளையும் தருவது தான் திராவிடப் பொருளாதாரம். பார்க்க… முகநூல் உரையாடல்