கேள்வி: அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்? இதனை ஏற்றுக் கொள்வது அல்லவா புத்திசாலித் தனம்? பதில்: 1938ல் ராஜாஜி இந்தியைத் திணித்தார். 1965 வரை பல உயிர்களைக் கொடுத்துப் போராடி தான் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. 1920களில் நீதிக் கட்சி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. 1950ல் இந்திய அரசியல் சாசனம் அதனைப் பறித்த போது, போராடித் தான் மீட்டெடுத்தோம். அரசியல் உரிமை […]
திராவிடம்
ஆரிய எதிர்ப்பு பேசுவது இன வெறி ஆகாதா? நாம் தமிழர் பேசுவதை மட்டும் இன வெறி என்கிறீர்களே!
கேள்வி: ஆரிய எதிர்ப்பு பேசுவது இன வெறி ஆகாதா? நாம் தமிழர் பேசுவதை மட்டும் இன வெறி என்கிறீர்களே! பதில்: தெலுங்கு பேசும் ஆதிக்கச் சாதிக்காரர் ஒருவரைப் போல்தெலுங்கு பேசும் அருந்ததியர் ஒருவர் பேசும் மொழியின் காரணமாக உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள முடியுமா? இங்கு ஆதிக்கம் என்பது சாதி, பொருளாதார வலுவால் வருவது. மொழியால் வருவது அல்ல. மொழியின் பெயரால் ஆதிக்கம் அமையவில்லை என்னும் போது, தமிழர் எதிர் பிற மொழியினர் என்று பகைமை பாராட்டுவது […]
திராவிடமே இந்தியாவுக்கான அரசியல்
திராவிடமே இந்தியாவுக்கான அரசியல்! அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா! பார்க்க… முகநூல் உரையாடல்
மக்களிடம் செல் என்றார் அறிஞர் அண்ணா.
மக்களிடம் செல் என்றார் அறிஞர் அண்ணா. 12,000 ஊராட்சி சபை கூட்டங்களைக் கூட்டினார் தளபதி. அதன் பின் கிடைத்த வெற்றியை வரலாறு பேசும். பார்க்க… முகநூல் உரையாடல்
அன்றே சொன்னார் அண்ணல் அம்பேத்கர்!
பார்க்க… முகநூல் உரையாடல்
சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா?
கேள்வி: சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா? பதில்: அண்ணா அறிவாலய அருங்காட்சியகத்துக்குச் செல்லுங்கள். அங்கு அயோத்திதாசரை திராவிட இயக்க வரலாற்றின் முன்னோடி என்று குறிப்பிட்டுள்ளார்கள். அம்பேத்கரைத் தனக்கும் தலைவராகத் திகழக் கூடியவர் என்று பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட இயக்கத் தோழர்கள் பலரும் பெரியாருக்கு இணையாகவும் மேலாகவும் அம்பேத்கரை மதிக்கிறார்கள். இவ்வளவு ஏன், சாதி வெறி பிடித்த யாரும் அண்ணாவையும் கலைஞரையும் தலைவராக ஏற்றுக் கொண்டு இந்த இயக்கத்தில் […]
கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா?
கேள்வி: கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா? பதில்: நான் கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இன்று கல்வி பரவலாகப் பலருக்கும் கிடைப்பதில் (accessibility; not affordability) தனியாரின் பங்கை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு விடுதி கூட இல்லையே என்று தொடங்கியது தான் திராவிட இயக்கம். இந்தியாவிலேயே அதிகமாக ~50% பேர் தமிழகத்தில் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது திராவிடத்தின் மாபெரும் சாதனை. ஆனால், * கல்வி தரமில்லை என்கிறார்கள்* கல்வி தனியார்மயமாகி விட்டது […]
நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா?
கேள்வி: நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா? பதில்: நீங்கள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக திமுகவை ஆதரிக்கிறீர்கள். ஆனால், நான் திமுகவை ஆதரிப்பதற்கு 1000 காரணங்கள் உள்ளன. திமுக அசிங்கம் இருந்தாலும் ஆதரித்துத் தொலைவோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் தான் அதை விட்டு விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் 2G, ஈழம், வாரிசு அரசியல், வாஜ்பாயுடன் கூட்டணி என்று ஏதாவது ஒரு […]
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா என்கிறார்கள். தனியாரை ஒழித்தால் ஒரே தரத்தில் கல்வி கிடைக்கும். ஆனால், எல்லாருக்கும் கல்வி கிடைக்காது. ஆம், காசு இருந்தால் கூட கல்வி கிடைக்காது. இது என்ன கதையாக இருக்கிறதே என்கிறீர்களா? இலங்கையில் உயர் கல்வித் துறை எப்படிச் செயற்படுகிறது என்று அங்குள்ள நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். இன்று இந்தியாவிலேயே அதிகம் மக்கள் கல்லூரிக் கல்வி பெறுவதில் தமிழகம் தான் முதலிடம். வழக்கம் போல, திராவிடத்தின் இந்தச் சாதனையையும் குற்றமாக்கி, […]
உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
கேள்வி: உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன? பதில்: ஏதேனும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அந்தச் சாதியின் வேட்பாளர்கள் ஒருவரைக் கூட ஒரு பெரிய கட்சி தேர்தலில் நிறுத்தவில்லை என்று கொள்வோம். எங்கள் சாதி ஆளை நிறுத்துகிற கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்பது சாதி வெறி. எங்கள் சாதியில் இத்தனை இலட்சம் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இத்தகைய துயரங்களைப் படுகின்றனர். அவர்களின் துயர் துடைக்க இத்தகைய சட்டங்களும் திட்டங்களும் தேவை. […]