• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

சாதி

SBI மீது வழக்கு தொடுக்கலாமா?

July 25, 2019

கேள்வி: SBI மீது வழக்கு தொடுக்கலாமா? பதில்: இது தேவையில்லாத ஆணி. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அறிவிக்காமல் தேர்வு நடத்தியதற்கு வேண்டுமனானால் விளக்கம் கேட்கலாம். ஆனால், இது தான் சாக்கு என்று கேள்வித்தாளைக் கடினமாக்கி நம்ம ஆட்களையும் சேர்த்து தோல்வியுறச் செய்வார்கள். மற்றபடி, இது ஒரு SBI தேர்வில் மட்டும் நடக்கவில்லை. BHEL தேர்வு, அஞ்சல் துறைத் தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என்று பல இடங்களிலும் இதே போக்கு தான். BHEL தேர்வு முடிவு பாருங்கள். […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

பணம் ஒரு மூலதனம். அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.

July 24, 2019

பணம் ஒரு மூலதனம். அதைச் சும்மா வைத்திருந்தாலே வட்டி மூலம் குட்டி போடும். அது போலவே சாதியும் ஒரு மூலதனம். நீங்கள் OBCஆகப் பிறந்தால் 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்குப் போராட வேண்டும். இன்று வரை 27% OBC இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு உத்தரவு வந்த சூட்டில் ஆறே மாதங்களில் பட்டையைக் கிளப்புகிறது. Rich get richer போல் ஏற்கனவே சாதியின் உயர் அடுக்கில் இருப்பவர்கள் அந்தச் சாதியை வைத்தே […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

அண்ணா சொல்வதைப் படியுங்கள்

July 18, 2019

மேலாளர்கள் அனைவரும் ஒரே சாதியாக இருந்தால் மற்ற ஊழியர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, நீங்கள் எவ்வளவு தான் உயரிய பதவிகளுக்குப் போனாலும் காசு பணம் வைத்திருந்தாலும் இட ஒதுக்கீடு தேவை என்றேன். நண்பர் ஒருவர் “இதை எல்லா சாதிகளும் செய்கிறார்களே” என்றார். ஆம், இது எல்லா சாதிகளிலும் உள்ளது. அதனால் தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டு எந்த ஒரு சாதிப் பெயரையும் சொல்லவில்லை. சாதியின் பெயரால் யார் குழு சேர்ந்தாலும் அது பார்ப்பனியம் தான். ஒருவரின் உழைப்பு, […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

50% மாணவர்கள் கல்லூரி செல்வதற்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு?

July 16, 2019

50% மாணவர்கள் கல்லூரி செல்வதற்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு? இது எப்படி ஒரே குடும்பம் பயன் அடையவில்லை என்பதை நிறுவும்? இதோ புதிருக்கான விடை! சாதி என்பது என்ன? ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில். அதில் 100% கட்டாயச் சேர்க்கை. 100% கட்டாய இட ஒதுக்கீடு. முன்பு இருந்த 0% இட ஒதுக்கீடு என்பது அனைத்துச் சாதிகளுக்குமான அறிவிக்கப்படாத 100% இட ஒதுக்கீடு ஆகும். இன்றும் அர்ச்சகர் வேலைக்கும் மலம் அள்ளும் வேலைக்கும் இந்த […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம்

July 13, 2019

நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம் என்று சொன்ன உத்தமர்கள் மேடைக்கு வரவும். பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியின் நிலை. இப்போது மருத்துவம் படித்து முடிக்க குறைந்தது 30 இலட்சம் தேவை. நீட் எழுதுகிறேன் என்று ஒரு ஆண்டையும் தொலைத்து விட்டார்! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா?

July 12, 2019

கேள்வி: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா? அல்லது, அப்படி மாற்றலாமா? என்னிடம் ஒரு புதிய முறை இருக்கிறது! பதில்: ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நம்மை விட இந்த முறையைக் கொண்டு வந்த திராவிடத் தலைவர்களும் அண்ணல் அம்பேத்கர் போன்றோரும் அறிவாளிகள் என்பதை ஏற்றுக் கொள்ள நம் egoவை சற்று ஓரமாக வைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டையே முறைப்படியும் முழுமையாகவும் அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை ஒழுங்காக இரு தலைமுறைகள் […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

ஐயகோ, உயர் சாதிகள் எல்லாரும் பார்ப்பனர்களா?

July 11, 2019

ஐயகோ, உயர் சாதிகள் எல்லாரும் பார்ப்பனர்களா? ஏழை உயர் சாதிகளே இல்லையா? என்று கூவுவோருக்கு நீங்கள் பகிர வேண்டிய செய்தி! https://indianexpress.com/article/india/upper-caste-hindus-richest-in-india-own-41-total-assets-says-study-on-wealth-distribution-5582984/?fbclid=IwAR0q6q6NZaJA-FGDK3C_3slVkIAgubxUu0o0NgybwYJPxB904PAQzNVjpIw பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

தில்லி பல்கலையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிதாக 6000 இடங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

July 10, 2019

தில்லி பல்கலையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிதாக 6000 இடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், 3756 விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. குறைந்தது 12,000 விண்ணப்பங்களாவது வந்தால் தான் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமாம். எனவே, அவர்கள் அரிய வகை ஏழைகளைத் தேடி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம். இதெல்லாம் கேலிக்கூத்தாக இல்லையா? எங்காவது SC/ST/BC/MBC மக்கள் போதுமான அளவு விண்ணப்பிக்கவில்லை என்ற நிலை இருந்ததா? அப்படியே இருந்தாலும் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அவர்களைச் சேர்ப்பதற்கு […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

70 ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் OBC ஒதுக்கீடு முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவில்லை.

July 10, 2019

70 ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் OBC ஒதுக்கீடு முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குள்ளாக, அதை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப் போகிறார்களாம். ஏன் என்றால், கடந்த 5 ஆண்டுத் தரவுகளை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, ஒரு சில சாதிகளே தொடர்ந்து அதன் பயன்களைப் பெறுகிறார்களாம்! ஏற்கனவே Creamy layer என்று சொல்லி தகுதியான பலரை விரட்டி விட்டார்கள். அப்படியும் முட்டி மோதி வரும் இன்னும் சிலரையும் பொதுப் போட்டிக்கு விரட்டி விட்டு, OBC இட ஒதுக்கீட்டை நீர்த்துப் […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

அண்ணல் அம்பேத்கரின் பதவி விலகல்

July 9, 2019

1951. OBCக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை முன்னிட்டு நல ஆணையம் அமைக்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். 1979. ஜனதா கட்சி பிற்பட்டோர் நலனை முன்னெடுப்பதற்காக மண்டல் ஆணையத்தை நிறுவுகிறது. 1980. மண்டல் OBC இட ஒதுக்கீட்டுக்கான தன் பரிந்துரைகளைத் தருகிறார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதை நிறைவேற்றும் துணிவு ஒரு அரசுக்கும் இல்லை. 1990. வி.பி.சிங் OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அரசு ஆணை வெளியிடுகிறார். அரசு […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

  • « Go to Previous Page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Page 5
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2176