தமிழக மருத்துவத் துறைக்கு கலைஞர் ஆற்றிய பங்கு தொடர்பான குறிப்புகள். கலைஞர் வாழ்ந்தாலும் மறைந்தாலும் அவர் ஒரு Blockbuster. இது நூறாவது நாள் சிறப்புப் பகிர்வு. #ThankYouMK https://goo.gl/WUvCAG பார்க்க… முகநூல் உரையாடல்
கலைஞர்
50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கு மின்சாரம் தந்து முடித்தது திமுக
50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கு மின்சாரம் தந்து முடித்தது திமுக. இந்திய அரசு இன்றும் முயன்று கொண்டிருக்கிறது. தமிழக கிராமங்கள் அனைத்தும் மின் இணைப்பை பெற்றது எப்போது?——————————————————————–முன்பு ஒரு தொலைக்காட்சியில் பணிபுரியும்போது மின்வாரியம் எனது ‘பீட்’களில் ஒன்றாக இருந்தது. அப்போது முன்னாள் பொறியாளர் ஒருவர், அந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகள், தகவல்கள் ஆகியவற்றை தொடர்ந்து தந்துவந்தார். தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை கொண்டவர். ஆனால், அவரது பேச்சு நெடுக, மின்துறையில் தி.மு.க. செய்த காரியங்களின் […]
சைக்கிள் ஓட்டுவது ஒரு சமூக இயக்கமா?
சைக்கிள் ஓட்டுவது ஒரு சமூக இயக்கமா? அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப்படலாம். ஆனால், புதுக்கோட்டையில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான கிராமத்துப் பெண்களிடம் இந்த பதில் எடுபடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல பெண்கள், தங்களின் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேற, தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த சைக்கிள் உறுதுணையாக இருக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான இங்கு, சைக்கிள் ஓட்டுதல் என்பது கிராமப்புறப் பெண்களுக்கு சிறப்பான இயங்குவெளியாக இருக்கிறது. கடந்த 18 மாதங்களில் […]
மக்கள் மனதார வாழ்த்துவது கலைஞர் டிவி கொடுத்தார் என்று தான்.
கலைஞர் எவ்வளவோ சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தார். ஆனால், மக்கள் அவரை மனதார வாழ்த்துவது கலைஞர் டிவி கொடுத்தார் என்று தான். Maslow’s Hierarchy of Needs தெரிந்தால் இதில் வியப்பு இருக்காது. அந்த மக்களின் தேவைகள் அடிப்படையானவை. நல்ல படிப்பும் வேலையும் ஓய்வும் இருந்தால் சித்தாந்தம் பேசலாம் பார்க்க… முகநூல் உரையாடல்
1967-76 ஆட்சிக் காலத்தில் திமுக ஏன் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டவில்லை?
பதில்: 1970களில் மத்திய அரசு ஒரு விதி கொண்டு வந்தது. அதாவது, இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தூரம் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் ஒரு சில நகரங்களில் குவியாமல் பல நகரங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விதி உருவானது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 1,2,3 சென்னை – மூன்று கல்லூரிகள்4. செங்கல்பட்டு5. சேலம்6. கோவை7. தஞ்சாவூர்8. மதுரை9. திருநெல்வேலி இவற்றைத் […]
இலவசத் திட்டங்கள் சரி. ஆனால், அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் கண்டறிந்து தரலாமே?
பதில்: ஒரு ஊரில் ஒரே ஒருவருக்குத் தான் போலியோ தாக்கும். அது யாரென்று நமக்குத் தெரியாது. அவரைக் காக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து தரத் தான் வேண்டும். புண்ணியம் வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் செய்கிறோம். பணக்காரன் எல்லாம் சாப்பிட வராதே என்று விரட்டி விடுகிறோமா? உறவினர், நண்பர் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று தான் திருமணத்தில் விருந்து வைக்கிறோம். உணவு வீண் ஆனாலும் பரவாயில்லை என்று […]
இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அவை தரமாக இருக்க வேண்டாமா?
பதில்: 2006ல் தந்த கலைஞர் டிவி 12 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடையில் விற்கிற டிவி ஏதாவது இத்தனை ஆண்டுகள் warranty தருகிறதா? இல்லை, ரிப்பேரே ஆகாத மிக்சி, கிரைண்டர் யாராவது விற்கிறார்களா? ஆனால், தரம் இல்லை தரம் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைப்பீர்கள். சமச்சீர் கல்வி விசயத்திலும் இது தான் நடந்தது. பார்க்க… முகநூல் உரையாடல்
நன்றாக எழுதுகிறீர்கள். தி.மு.க. சார்பு இல்லாமல் எழுதினால் இன்னும் உங்கள் கருத்துகள் நிறைய பேரைச் சென்றடையுமே?
பதில்: நான் வேலை பார்த்த அமெரிக்க நிறுவனத்தில் CEO உட்பட 300 பணியாளர்களும் அமெரிக்க அதிபர் தேர்தலில் Clinton ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அது முதிர்ச்சியான மக்களாட்சி. இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், இராணுவத் தளபதிகள் கூட வலதுசாரி அரசியல் கருத்துகளைப் பரப்பி ஓய்வு பெற்ற பிறகு கூசாமல் அரசுப் பதவிகளைப் பெற்றுக் கொள்கிறர்கள். ஆனால், திராவிடம் மட்டும் ஏதோ தீண்டத்தகாத ஒரு கொள்கை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், திராவிட அரசியலைத் தனிமைப்படுத்துகிறார்கள். திராவிட அரசியலை […]
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை. முதல் 2 நிமிடங்கள் வரும் Highlights மட்டுமாவது பாருங்கள். அதற்குப ்பிறகு முழு உரையையும் நீங்களே பார்த்து விடுவீர்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
திராவிட அரசின் மக்கள் நலத் திட்டங்கள்
எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது.* கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார்.* கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், பெண்கள் உள்ள எங்கள் கிராமவாசிகளுக்கு உலக அறிவு வந்திருக்காது.* அம்மா தந்த மிக்சியும் […]