கேள்வி: முன்னேறிய சாதிகளில் ஏழைகளே இல்லையா? எனக்குத் தெரிந்த ஒரு அர்ச்சகர் மகள் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? பதில்: அந்த அர்ச்சகர் மகளாவது மருத்துவப் படிப்பு கிடைக்காமல் வேறு ஏதாவது கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருப்பார். ஆனால், எங்கள் அப்பத்தா, அமத்தா, அம்மா, பெரியம்மா, சித்திகள், அத்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கே அனுப்பி வைக்கப்படவில்லை. போவியா அங்கிட்டு! இட ஒதுக்கீடு என்று வரும் போது எல்லாம் இப்படி குதர்க்கமான ஒப்பீடுகள் […]
இட ஒதுக்கீடு
OBC Creamy layer
பேருந்துகளில் முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பெண்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்கள் காலியாக இருந்தால் மற்றவர்களும் அமர்வார்கள். உரிய ஆட்கள் வந்தால் எழுந்து இருக்கை தர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அப்படி இல்லாமல் கூட்டம் நெருக்கியடிக்கும் பேருந்துகளிலும் இந்த இடங்களைக் காலியாகவே வைத்திருப்பது முட்டாள்தனம். அது போலத் தான், இட ஒதுக்கீட்டிலும் யார் விடுபட்டுப் போவார்கள், கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று தரவுகள் சொல்கிறதோ, அவர்களுக்குத் தனியாகச் சில இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். […]
நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது.
நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது. அரசு கல்லூரிகளில் இருந்த இடங்களையும் 2,3 ஆண்டுகள் நீட் கோச்சிங் போக வசதியுள்ளவர்கள் அள்ளிப்போகிறார்கள். ஏழை மாணவர்கள் நடுத்தெருவில். இவ்வளவு செலவு செய்து படிக்கும் பணக்காரர்கள் அரசுப் பணிக்கோ ஏழைகளுக்குச் சேவை செய்யவோ வர மாட்டார்கள். அரசு மருத்துவமனைகள் செயலிழக்கும். தனியார் மருத்துவமனைகள் கொழிக்கும். நம் பிள்ளைகள் காலத்தில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும், மிகப் பெரிய பொது சுகாதாரப் பேரிடர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டிருகிறது மோடி […]
நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம்
நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம் என்று சொன்ன உத்தமர்கள் மேடைக்கு வரவும். பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியின் நிலை. இப்போது மருத்துவம் படித்து முடிக்க குறைந்தது 30 இலட்சம் தேவை. நீட் எழுதுகிறேன் என்று ஒரு ஆண்டையும் தொலைத்து விட்டார்! பார்க்க… முகநூல் உரையாடல்
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா?
கேள்வி: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா? அல்லது, அப்படி மாற்றலாமா? என்னிடம் ஒரு புதிய முறை இருக்கிறது! பதில்: ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நம்மை விட இந்த முறையைக் கொண்டு வந்த திராவிடத் தலைவர்களும் அண்ணல் அம்பேத்கர் போன்றோரும் அறிவாளிகள் என்பதை ஏற்றுக் கொள்ள நம் egoவை சற்று ஓரமாக வைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டையே முறைப்படியும் முழுமையாகவும் அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை ஒழுங்காக இரு தலைமுறைகள் […]
நீட் போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமா?
கேள்வி: நீட் போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமா? பதில்: முதலில், இப்படி ஒரு சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது! இரண்டாவது, வசதி வாய்ப்புள்ள எல்லோரும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டுக் கூடுதலாக தனியார் பயிற்சிக்கும் அனுப்பி வைத்து இந்த இடங்களை அபகரிக்கத் தொடங்குவார்கள். நாம் எதற்காக கொண்டு வருகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறாது. இது இன்னொரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது! யார் யாருக்கு அல்லது எந்த அடிப்படைகளில் இட […]
வட மாநிலங்களின் இட ஒதுக்கீடு
இது தான் வட மாநிலங்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் லட்சணம்! அரசியல் சட்டப்படி 49.5% SC/ST/OBC இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை எல்லாம் ஸ்வாஹா செய்து விட்டு 65% வரை உயர் சாதியினர் இடங்களைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேர் உயர் சாதியினர் படித்தும் 3.85% அரிய வகை ஏழைகளை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது! உங்கள் சாதிகளுக்குத் தான் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருக்கிறதே என்று உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் தனி ஒடுக்கீடு கொண்டு […]
மத்திய அரசாங்கமோ கட்டாயம் 10% நடைமுறைப்படுத்து என்கிறது.
1. மத்திய அரசாங்கமோ கட்டாயம் 10% நடைமுறைப்படுத்து என்கிறது. 2. உச்ச நீதிமன்றமோ கூடுதலாக 10% இடங்களை உருவாக்காமல் இதை நடைமுறைப்படுத்தாதே என்று தடை போடுகிறது. 3. பல்கலைக்கழகங்களோ நாங்கள் கூடுதலாக 10% இடங்களை உருவாக்குகிறோம். ஆனால், மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர காசு இல்லை என்கிறது. 10% ஏழைகளுக்குக் கல்வி என்ற பெயரில் கொண்டு வரும் திட்டத்திற்கான செலவு கடைசியில் எல்லா மாணவர்களின் தலையின் மேல் தான் விடியப் போகிறது. கூடுதலாக 10% இடங்களை […]
ஏழைகள் வாழவே கூடாதா? சாதி அடிப்படையில் நீங்கள் கொடுக்கிற 69% இடங்களை எல்லாம் பணக்காரர்களே அள்ளிப் போக மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
கேள்வி: ஏழைகள் வாழவே கூடாதா? சாதி அடிப்படையில் நீங்கள் கொடுக்கிற 69% இடங்களை எல்லாம் பணக்காரர்களே அள்ளிப் போக மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? பதில்: இது ஒரு நல்ல கேள்வி (கேட்டது நான் தான் 🙂 ) இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் ஏழ்மை அமைந்திருக்கிறது என்பதைப் பல முறை விளக்கி விட்டேன். ஒவ்வொரு சாதிக்குள்ளும் இருக்கும் ஏழைகளை ஐயம், திரிபு அற சுட்டும் குறிகாட்டிகள் (Poverty indicators) யாவை? * ஒருவர் தமிழ் வழிய மாணவரா? அவர் […]
எப்படி OC பிரிவினர் மட்டும் அதிக இடங்களில் சேர முடிகிறது. தப்பு எங்கு நிகழ்கிறது?
கேள்வி: எப்படி OC பிரிவினர் மட்டும் அதிக இடங்களில் சேர முடிகிறது. தப்பு எங்கு நிகழ்கிறது? பதில்: 1. பேராசிரியர் போன்ற பணிகளில் அவர்களே 20, 30 வருடங்களாக இருப்பார்கள். அதாவது OBC இட ஒதுக்கீடு வருவதற்கு முன்பிருந்தே. அப்போது SC/ST இடங்களைத் தவிர மீதம் 77.5% இடங்களையும் அவர்களே வாரிச் சுருட்டிக் கொண்டார்கள். 2. இப்போது OBC ஒதுக்கீடு வந்த பிறகு கண்துடைப்பு நேர்காணல்கள் நடத்துவார்கள். தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி இடங்களை ஆண்டுக் […]