கலப்பு மணம் புரிந்த தம்பதியருக்குப் பிறந்தது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அதில் தாய் அல்லது தந்தையின் சாதியில் எதுவொன்றை மூத்த குழந்தைக்குச் சூட்டப்பட்டதோ, அதே சாதியே அடுத்தடுத்த குழந்தைக்கும் சூட்டப்பட வேண்டும். மாறாக, ஒரு பிள்ளைக்குத் தாயின் சாதியும், ஒரு பிள்ளைக்குத் தந்தையின் சாதியும் சூட்ட விரும்பினாலும் சூட்ட முடியாது. அவ்வாறில்லாமல் நான் சாதிகளில் நம்பிக்கை இல்லாதவர் எனச் சொல்லிக் கொண்டு, இருவரின் சாதியை விட்டுவிட்டு மூன்றாவது சாதியைச் சூட்டிக் கொள்வேன் எனவும் சொல்ல இயலாது. […]
இட ஒதுக்கீடு
அருந்ததியர் இட ஒதுக்கீடு
கேள்வி: தமிழக அரசு அருந்ததியர்களுக்கு வழங்கும் உள் இட ஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்துகிறது? பதில்: * SC பிரிவுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 3% இடங்களை அருந்ததியர்களுக்கு (SCA) உள் ஒதுக்கீடாகத் தருகிறார்கள். * கூடுதல் எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர்கள் இருந்தால், 3% உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மேற்பட்டு உள்ள அனைத்து SC இடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம். அதே போல், போதுமான எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர் இல்லாவிட்டால், அந்த இடங்கள் அதே ஆண்டு மற்ற SC சாதியினருக்கு […]
சாதி மாறிய திருமணத்தில் இட ஒதுக்கீடு
கேள்வி: நான் சாதி மாறி திருமணம் செய்தால் இட ஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? பதில்: இட ஒதுக்கீடு என்பது சாதியோடு தொடர்பு உடையது. சாதி உங்கள் பிறப்போடு தொடர்பு உடையது. திருமணம் செய்தாலும் உங்கள் சாதி மாறாது. எனவே, சாதி மாறி திருமணம் செய்தாலும் உங்களுக்கு உங்களின் சாதியின் அடிப்படையில் எப்போதும் என்ன இட ஒதுக்கீடு கிடைத்ததோ அதே தான் கிடைக்கும். உங்கள் மனைவி/கணவர் சாதியின் அடிப்படையில் இடம் பெற முடியாது. உங்கள் குழந்தையின் சாதி என்ன […]
தமிழக இட ஒதுக்கீடு விவரம்
தமிழக அரசு தரும் இட ஒதுக்கீடு விவரங்கள் இதோ! * 31% பொதுப்பிரிவு இடங்களுக்கு அனைத்து சாதிகளும் போட்டியிடலாம். பொதுப்பிரிவு இடங்கள் நிரம்பிய பிறகு தான் 69% இட ஒதுக்கீடு தொடங்கும். நீங்கள் BC/MBC/SC/ST ஆக இருந்தாலும் 200/200 பெற்றால், பொதுப்பிரிவிலேயே உங்கள் இடம் கணக்கு வைக்கப்படும். * பொதுப்பிரிவு இடத்தைத் தான் நீங்கள் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் 199/200 பெற்று பொதுப்பிரிவு தர வரிசையில் இருக்கிறீர்கள். ஆனால், பொதுப்பிரிவின் கீழ் சென்னை […]
இட ஒதுக்கீடு – பலன் பெறுவது யார்?
உங்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள முறையிலேயே தங்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைப்பதால் இந்தச் சட்டம் வேண்டாம் என திரும்பப் பெற கேட்டுக் கொண்டார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப 100% இட ஒதுக்கீடு அளித்தால், அதை முதலில் எதிர்ப்பவர்கள் ஆதிக்கச் சாதிகளாகத் தான் இருப்பார்கள். ஏன் எனில், தற்போது இருக்கும் முறையிலேயே அவர்கள் தான் கூடுதலாகப் பயன் பெறுகிறார்கள். அனுபவிப்பதையும் அனுபவித்து விட்டு “இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோம், தரம் போனது, […]
DRDO இட ஒதுக்கீடு மோசடி
DRDO விஞ்ஞானிகள் வேலைவாய்ப்பு 62% ஆதிக்கச் சாதிகள் கையில். இது Group A Gazetted officer நிலை உடைய பணி. வழக்கம் போல் OBCக்கு அல்வா! ஆதாரம் – DRDO பணியாளர் விவரங்கள் ஆனால், ஆதிக்கச் சாதிகள் ஆக்கிரமித்து இருக்கும் இந்த நிறுவனத்தின் தகுதி என்ன? தொடர்புடைய செய்திகள் காணுங்கள்: DRDO has much to answer for its poor performance Is DRDO really incompetent? What numbers say Shut Down Laboratories […]
இட ஒதுக்கீடும் பொதுப்புத்தியும்
ஒரு பாலம் இடிந்து விழுந்தால், கோட்டாவில் படித்து வந்த பொறியாளர்கள் தரம் இல்லை என்பார்கள். ஒரு ராக்கெட் கடலில் விழுந்தால், ISRO விஞ்ஞானிகள் என்ன சாதி என்று யாரும் கேட்க மாட்டார்கள். இத்தனைக்கும் திருப்பதிக்குப் போய் சாமி கும்பிட்டு வேறு ராக்கெட் அனுப்புவார்கள். பார்க்க – முகநூல் உரையாடல்
ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் யார்?
இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து ஒரு ரிசர்வ் வங்கி கவர்னர் கூட SC/ST/OBC சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார்கள். இந்தத் தகவல் சரியா என்று உறுதிப்படுத்திச் சொல்லுங்கள். இது தான் இன்றைய வீட்டுப் பாடம். தகவல் – List of Governors of Reserve Bank of India பார்க்க – முகநூல் உரையாடல்
100% இட ஒதுக்கீடு நிறைவேற்றலாமா?
கேள்வி: சாதி வாரி கணக்கெடுத்து 100% இட ஒதுக்கீடு நிறைவேற்றலாமே? பதில்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் சாதி வாரி மக்கள் தொகை விவரம் பின்வருமாறு: * பிற்படுத்தப்பட்ட சாதிகள் – 68% * பட்டியல் இனத்தவர் – 20.01% * பட்டியல் இனப் பழங்குடிகள் – 1.10% எஞ்சி இருக்கும் முன்னேற்றப்பட்ட சாதிகள் = 10.89% இந்த 10.89% இட ஒதுக்கீட்டை விட இப்போது இருக்கும் 31% பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு முன்னேற்றப்பட்ட […]
இட ஒதுக்கீடு – வாசிப்புப் பட்டியல்
* நிறைய பேர் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதினால் பிற மொழி நண்பர்களுக்கு விளக்க உதவியாக இருக்கும் என்றார்கள். Mohan Vanamalai என்று ஒருவர் இது தொடர்பாக Quoraவில் எழுதிக் குவித்திருக்கிறார். ஒவ்வொரு விடையும் ஒரு தோட்டாவின் கூர்மையோடு பாய்கிறது. தவற விடாதீர்கள். * சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை – இட ஒதுக்கீடு வரலாறு * இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதன் அடிப்படையை விளக்கும் இரண்டு Power point கோப்புகள். கட்டாயம் […]