கேள்வி: தமிழ்நாட்டில் உயர் சாதி ஏழைகளே இல்லையா? ஏன் இந்த வன்மம்? பதில்: 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுள் ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் எத்தனைப் பேர் என்ற விவரத்தை RTI மூலம் பெற்றிருப்பதாக நண்பர் Sankar J தெரிவித்து இருக்கிறார். மொத்தம் தேர்வு எழுதிய 9,27,657 பேரில் வெறும் 24,955 பேர் தான் FC பிரிவினர். அதாவது 3%. இந்த 3% பேரில் எத்தனைப் பேர் உண்மையிலேயே ஏழைகள் என்பதற்கு எந்தத் தரவும் […]
இட ஒதுக்கீடு
ஐயகோ, உயர் சாதிகள் எல்லாரும் பார்ப்பனர்களா?
ஐயகோ, உயர் சாதிகள் எல்லாரும் பார்ப்பனர்களா? ஏழை உயர் சாதிகளே இல்லையா? என்று கூவுவோருக்கு நீங்கள் பகிர வேண்டிய செய்தி! https://indianexpress.com/article/india/upper-caste-hindus-richest-in-india-own-41-total-assets-says-study-on-wealth-distribution-5582984/?fbclid=IwAR0q6q6NZaJA-FGDK3C_3slVkIAgubxUu0o0NgybwYJPxB904PAQzNVjpIw பார்க்க… முகநூல் உரையாடல்
தில்லி பல்கலையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிதாக 6000 இடங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
தில்லி பல்கலையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிதாக 6000 இடங்களை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், 3756 விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. குறைந்தது 12,000 விண்ணப்பங்களாவது வந்தால் தான் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமாம். எனவே, அவர்கள் அரிய வகை ஏழைகளைத் தேடி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம். இதெல்லாம் கேலிக்கூத்தாக இல்லையா? எங்காவது SC/ST/BC/MBC மக்கள் போதுமான அளவு விண்ணப்பிக்கவில்லை என்ற நிலை இருந்ததா? அப்படியே இருந்தாலும் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அவர்களைச் சேர்ப்பதற்கு […]
70 ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் OBC ஒதுக்கீடு முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவில்லை.
70 ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் OBC ஒதுக்கீடு முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவில்லை. அதற்குள்ளாக, அதை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப் போகிறார்களாம். ஏன் என்றால், கடந்த 5 ஆண்டுத் தரவுகளை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, ஒரு சில சாதிகளே தொடர்ந்து அதன் பயன்களைப் பெறுகிறார்களாம்! ஏற்கனவே Creamy layer என்று சொல்லி தகுதியான பலரை விரட்டி விட்டார்கள். அப்படியும் முட்டி மோதி வரும் இன்னும் சிலரையும் பொதுப் போட்டிக்கு விரட்டி விட்டு, OBC இட ஒதுக்கீட்டை நீர்த்துப் […]
அண்ணல் அம்பேத்கரின் பதவி விலகல்
1951. OBCக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை முன்னிட்டு நல ஆணையம் அமைக்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுகிறார். 1979. ஜனதா கட்சி பிற்பட்டோர் நலனை முன்னெடுப்பதற்காக மண்டல் ஆணையத்தை நிறுவுகிறது. 1980. மண்டல் OBC இட ஒதுக்கீட்டுக்கான தன் பரிந்துரைகளைத் தருகிறார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதை நிறைவேற்றும் துணிவு ஒரு அரசுக்கும் இல்லை. 1990. வி.பி.சிங் OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அரசு ஆணை வெளியிடுகிறார். அரசு […]
நாங்கள் திறக்கும் கல்லூரிகளை மட்டும் ஏன் தரம் இல்லை என்கிறீர்கள்?
ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளைப் படாத பாடு படுத்தி தர ஆய்வு செய்கிறார்கள். மருத்துவம் படிக்கக் கனவு காணும் மாணவர்கள் செத்துப் போகிறார்கள். அப்போது எல்லாம் மருத்துவக் கல்லூரி இடங்களை உயர்த்தாமல், இப்போது சில உயர் சாதியினர் படிப்பதற்கு இலஞ்சமாக, மற்றவர்களுக்கும் சில இடங்களைக்கூட்டிக் கொடுப்பார்கள் என்றால், ஏன் இத்தனை நாளாக அதைச் செய்யவில்லை? இப்போது எங்கே போனது தரம்? உயர்சாதி ஆட்கள் படிக்க எத்தனை இடங்களை வேண்டுமானால் உருவாக்கலாம் என்றால், தமிழர்கள் அனைவரும் படிக்கட்டும் என்று தமிழ்நாடு […]
69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி!
69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி! SCக்கு 18% இட ஒதுக்கீடு என்றால், அதைப் போக 31% திறந்த இடங்களுக்கும் போட்டி இட்டு வெல்ல முடியும். ஆக, அதிக பட்சம் 49% இடங்களுக்கு அவர்கள் போட்டியிட முடியும். திறந்த போட்டியில் 10% இட ஒதுக்கீட்டுக்குக் கொடுத்து விட்டால், SCக்கள் போட்டியிடக் கூடிய இடம் 39% இடங்களாகக் குறைந்து விடும். இது போலவே ST, BC, MBC […]
மத்திய அரசு தரும் 27% OBC ஒதுக்கீட்டில் உள்ள Creamy layer
மத்திய அரசு தரும் 27% OBC ஒதுக்கீட்டில் Creamy layer என்ற பெயரில் 8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களை நீக்கி விடுகிறார்கள். இருந்தாலும், அது சாதியின் பெயரால் OBC இட ஒதுக்கீடு என்று தான் அழைக்கப்படுகிறது. ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அழைக்கப்படுவதில்லை. ஆனால், அதே 8 லட்சம் வருமானத்துக்குக் குறைவாக உள்ள உயர் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு தரும் போது மட்டும், ஏன் அதனை பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்று […]
69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளலாமே?
கேள்வி: 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளலாமே? பதில்: 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, தற்போது மருத்துவக் கல்லூரி இடங்களில் கூடுதலாக 25% தருவதாகச் சொல்கிறார்கள். இது எப்படிப்பட்ட offer என்றால், “நாங்கள் தனியாக விசம் தர வில்லை. நீங்கள் ஏற்கனவே பருகிற பாலில் தான் விசம் கலக்கிறோம். வேண்டும் என்றால் கூடுதலாக 2 லிட்டர் பால் தருகிறோம்.” என்று சொல்வதற்கு ஒப்பாகும். மருத்துவம் போன்ற படிப்புகளை […]
எல்லோரும் தன் வீட்டில் யாருக்காவது வேலை, படிப்பு கிடைத்தால் தான் இட ஒதுக்கீட்டால் பயன் என்று நினைக்கிறார்கள்.
எல்லோரும் தன் வீட்டில் யாருக்காவது வேலை, படிப்பு கிடைத்தால் தான் இட ஒதுக்கீட்டால் பயன் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக இருக்கும் இட ஒதுக்கீடு காரணமாக ஒட்டு மொத்த தமிழகமே ஒரு ஆள் விடாமல் பயன் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை. இட ஒதுக்கீட்டில் படித்து, வேலை பெற்ற அதிகாரிகள் தான் தமிழகத்தின் கடைக்கோடி வரை வரும் திட்டங்களை வகுக்கிறார்கள். அதற்கு இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தான் உந்து விசையாக இருக்கிறார்கள். இட […]