கேள்வி: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி? பதில்: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று பாஜக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறது. தற்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். முதலில், அது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற வேண்டும். பிறகு, அது அரசியல் சாசனப்படி செல்லும் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருளாதார இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கிற 49%க்கு மேல் […]
அரசியல்
தமிழக அரசு தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை தருகிறதே? இது சரியா?
கேள்வி: தமிழக அரசு தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை தருகிறதே? இது சரியா? பதில்: கனடா அரசும் சிங்கப்பூர் அரசும் தைப் பொங்கல் கொண்டாடினால் மகிழும் தம்பியே, தமிழக அரசும் அது போல் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டாடினால் ஏன் உனக்குக் கசக்கிறது? பாக்கிஸ்தான் பிரிந்த பிறகு, “உங்களுக்குத் தான் தனி நாடு கொடுத்து விட்டோமே! இந்தியாவில் எதற்கு இசுலாமியருக்கு விடுமுறை” என்று கேட்க முடியுமா? இதைப் போலவே, 1956 வரை இருந்த மதராஸ் மாகாணத்தில் அனைத்து மொழி […]
ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?
கேள்வி: ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்? பீகார், ஜார்க்கண்டோடு போட்டி போட்டு நாம் என்ன கண்டோம்? உலக நாடுகள் அளவு முன்னேற வேண்டாமா? பதில்: ஒரு விலங்கை மரத்தில் கட்டி வைத்து ஓடு ஓடு என்றால் அந்தக் கயிற்றின் நீளம் அளவுக்குத் தான் ஓட முடியும். இன்னும் ஓட வேண்டும் என்றால், ஒன்று கயிற்றை நீளமாக்க வேண்டும். இது மாநில சுயாட்சி. அல்லது, மரத்தைப் பிடுங்கி எறிய வேண்டும். இது தனி நாடு. […]
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல்
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல். Download இணைப்புகளுடன். அரிய புதையல். பார்க்க… முகநூல் உரையாடல்
சாதி வேட்பாளர்கள்
கேள்வி: கட்சிகள் ஏன் சாதி பார்த்து வேட்பார்களைப் பார்த்து நிறுத்துகின்றன? பதில்: கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிகள் குறித்த இந்தப் படத்தைக் காணுங்கள். காங்கிரசு, கம்யூனிஸ்ட், அதிமுக அனைத்தும் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளன. இதற்குப் பெயர் Systemic bias. அதாவது ஒரு சமூகத்தில், பணியிடத்தில் இயல்பாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் யாராக இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள். இதே கோவில்பட்டி தொகுதியில் 13 தேர்தல்களில் 1 முறை தான் […]
திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே?
கேள்வி: திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே? பதில்: சமூகத்தில் தொழிற்சாலைப் பொருளாதாரம் உயரும் போது சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்க இயலாதது. அதற்குப் பிறகு சேவைப் பொருளாதாரத்துக்கு மாறி அனைவரின் வருமானமும் உயரும் போது, சூழல் மாசு குறையும். இது உலகம் முழுக்க அவதானிக்கும் போக்கு. இதற்குப் பெயர் Environmental Kuznets curve. இது தான் தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. (தொடர்புடைய செய்திகள்) (தொடர்புடைய செய்திகள்) பார்க்க… முகநூல் […]
ஏன் IIT, கேந்திரிய வித்யாலயா, நவோதயா போல் தரமான கல்லூரிகளையும் பள்ளிகளையும் திராவிட ஆட்சி தரவில்லை?
கேள்வி: ஏன் IIT, கேந்திரிய வித்யாலயா, நவோதயா போல் தரமான கல்லூரிகளையும் பள்ளிகளையும் திராவிட ஆட்சி தரவில்லை? பதில்: ஒரு IITயில் 100 பேர் படிக்கிறார்கள். 100க்கு 100 வளாகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் 100% வேலை வாங்கித் தருகிறார்கள். எனவே, கூடுதல் தரம் என்று கூறுவார்கள். ஆனால், 125 கோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்கள் படிக்க வைத்தது 100 பேர் மட்டுமே. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒரு இலட்சம் […]
ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்?
கேள்வி: ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்? திமுக, அதிமுகவை தமிழ்நாட்டில் உள்ள மற்ற எத்தனையோ கட்சிகள் கூடத் தான் விமர்சிக்கின்றன? பதில்: மற்ற கட்சிகள் திமுக, அதிமுகவைத் திட்டுவது தேர்தல் அரசியலின் கட்டாயங்கள். ஆனால், அவற்றை ஊதிப் பெரிதாக்கி திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று விடாமல் பரப்புவது சங்கி வேலை. உலகத் தமிழர் ஒற்றுமை, Big boss ஓவியா, சல்லிக்கட்டுத் தமிழன் – இப்படிப் பல்வேறு பெயர்களில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் குழுமங்களுக்குச் […]
இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் யார்?
இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் , ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மக்கள். வருடத்திற்கு 35 லிட்டர் அளவுக்கு குடிக்கிறார்கள். இதில் 85% கள் மற்றும் நாட்டு சாராயம். நாட்டிலே அதிகமாக சாராயம் புழங்கும் இடம் குஜராத் (95%) . குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர , ஜாரகண்டட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள குடிகாரர்கள் , கள் & சாராயத்தை 80%+ […]
மக்களுக்கு இலவசங்களாக அள்ளிக் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாட்டார்களா?
கேள்வி: மக்களுக்கு இலவசங்களாக அள்ளிக் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாட்டார்களா? பதில்: இல்லை. இத்தனை நாள் அவர்களுக்குக் குறைந்த கூலிகளைக் கொடுத்து வந்தவர்கள் தான் மக்கள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். Universal basic income என்ற ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, ஒரு அரசு தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை மாதா மாதம் இலவசமாக அளிக்க வேண்டும். இதைப் பின்லாந்து, நெதர்லாந்து, கனடா போன்ற பல நாடுகள் ஆய்வு செய்து […]