உழவர் சந்தை, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகங்கள் போன்றவை எல்லாம் திட்டங்கள். அடுத்த கட்சி ஆட்சி வரும் போது காழ்ப்புணர்வின் காரணமாக முடக்கப்படக் கூடும். ஒரு கட்சி தானே கொண்டு வந்த நல்ல திட்டம் என்றாலும் அரசிடம் காசு இல்லை என்றாலும் முடங்கக் கூடும். ஆனால், இந்தச் சட்டம் இருக்கிறதே சட்டம்! அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சென்றாலும் நின்று விளையாடும்! நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சட்டங்கள் யாவற்றையும் திமுகவின் அண்ணாவும் கலைஞரும் […]
அண்ணா
அண்ணா சொல்லிக் கொடுத்த கணக்கு
என் கருத்தைச் சொன்னால், 2 பேர் திட்டுவார்கள். 3 பேர் சிரிப்பார்கள். 5 பேர் புரிந்து கொள்வார்கள். நான் பேசினால் எனக்கு அந்த 5 பேர் இலாபம். ஏச்சுக்கும் நகைப்புக்கும் அஞ்சி பேசாமல் இருந்தால் 5 பேர் நட்டம். நம் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்காக நாம் பேச வேண்டுமே தவிர, என்றுமே இந்தப் பக்கம் வராமல் போகிறவர்களுக்காக அமைதியாக இருத்தல் ஆகாது. எனக்கு இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. பார்க்க – […]
எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?
எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்? ஒரு சில நண்பர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் “உனக்கு ஏன் வீண் வேலை” என்கிறார்களாம். காவல் துறையோ பெரியார் பெயரில் விழா எடுத்தால் சாதிக் கலவரம் வரும் என்று அனுமதி மறுக்கிறதாம். எனவே, வீம்புக்கேனும் உங்கள் சக்திக்கு ஏற்ப விழா எடுப்பது அவசியம். எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாவிட்டால், “பெண் ஏன் அடிமையானாள்” நூல் மலிவு விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி உங்கள் நண்பர்கள், […]
தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை!
திமுக தலைவர் கண்டனத்தை அடுத்து, இக்கூட்டம் அறிவித்தபடி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மறுமொழி பார்க்கவும். தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை! திமுக தலைவர் கண்டனம்! இத்தகையச் செய்திகளைக் காணும் போது தான், இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியாவது, இன்னும் வீரியமாக திராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்க… முகநூல் உரையாடல்
கழகத்தோழர்களுக்கு நான்கு முக்கிய குணங்கள் இருக்க வேண்டும்.
கழகத்தோழர்களுக்கு நான்கு முக்கிய குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, எதையும் சகித்துக்கொள்ளும் பொறுமைக் குணம். மற்றது எதற்கும் கோபம் கொள்ளாமல் இருப்பது. இன்னொன்று எதற்காகவும் சலித்துக்கொள்ளாமல் இருப்பது. நான்காவது எதற்கும் வேதனைபட்டுக்கொள்ளாமல் இருப்பது. – அறிஞர் அண்ணா. நமது பாதை, மன்றம் ஆண்டு மலர் 1962. பார்க்க… முகநூல் உரையாடல்
பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை! தமிழினம் உள்ள வரை அதற்கான அரசியல் வழியை சிரிக்க, சிந்திக்க, சொக்க வைக்கும் நடையில் கூறிச் சென்றிருக்கிறார்! தவறாமல் கேளுங்கள். நன்றி – Fuzail Ahmad பார்க்க… முகநூல் உரையாடல்
இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்!
இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்! 2006 – 2008 ஆட்சிக்காலத்தில் திமுக 1,60,671 ஏக்கர் நிலத்தை இலவசமாக மக்களுக்கு அளித்தது. 2009 ஆம் ஆண்டு வரை, 1,75,798 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,747 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. அதே போல், 6,46,785 இலவச பட்டாக்களும் வழங்கப்பட்டிருந்தன. இதே காலக்கட்டத்தில், மேற்கு வங்கத்தை ஆண்ட கம்யூனிஸ்டுகள் 26,838 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கினர். 3416 பட்டாக்களை மட்டுமே வழங்கி இருந்தனர். திமுக 1970ல் அறிமுகப்படுத்திய நில உச்ச […]