70 ஆண்டுகளாகப் போராடியும் இன்னும் OBC ஒதுக்கீடு முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவில்லை.
அதற்குள்ளாக, அதை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்கப் போகிறார்களாம்.
ஏன் என்றால், கடந்த 5 ஆண்டுத் தரவுகளை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, ஒரு சில சாதிகளே தொடர்ந்து அதன் பயன்களைப் பெறுகிறார்களாம்!
ஏற்கனவே Creamy layer என்று சொல்லி தகுதியான பலரை விரட்டி விட்டார்கள்.
அப்படியும் முட்டி மோதி வரும் இன்னும் சிலரையும் பொதுப் போட்டிக்கு விரட்டி விட்டு, OBC இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யவும், OBC இடங்களைக் காலியாக வைத்துப் பிறகு அதை உயர் சாதிகள் சுருட்டிக் கொள்ளவுமே இந்த ஏற்பாடு.
இதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைத்திருக்கிறார்கள்.
இதன் பரிந்துரைகள் அடிப்படையில் 2021 சாதி வாரி கணக்கெடுப்பும் இருக்கலாம். அதில் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
OBCக்களுக்கு மட்டும் இவ்வளவு வக்கணையாக ஆய்வு செய்கிறார்களே!
எந்த ஆய்வின் அடிப்படையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள்?
உயர் சாதிகளில் குறிப்பிட்ட எந்தச் சாதியினர் நிறைய பயன் பெறுகிறார்கள் என்று 2000 ஆண்டு தரவு இருக்கிறது.
அந்தத் தரவைப் பயன்படுத்தி, சில உயர் சாதிகளை இந்த 10% பிராடு ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பார்களா?
(செய்தி இணைப்புகள் மறுமொழியில்)
பார்க்க… முகநூல் உரையாடல்