50% மாணவர்கள் கல்லூரி செல்வதற்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு? இது எப்படி ஒரே குடும்பம் பயன் அடையவில்லை என்பதை நிறுவும்?
இதோ புதிருக்கான விடை!
சாதி என்பது என்ன?
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில். அதில் 100% கட்டாயச் சேர்க்கை. 100% கட்டாய இட ஒதுக்கீடு.
முன்பு இருந்த 0% இட ஒதுக்கீடு என்பது அனைத்துச் சாதிகளுக்குமான அறிவிக்கப்படாத 100% இட ஒதுக்கீடு ஆகும்.
இன்றும் அர்ச்சகர் வேலைக்கும் மலம் அள்ளும் வேலைக்கும் இந்த எழுதப்படாத 100% இட ஒதுக்கீடு விதி இருப்பதைக் காணலாம்.
இன்று தமிழகத்தில் 50% பேர் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். விடுதலைக்கு முன்பு இது 10% கூட இருந்திருக்காது.
10%ல் இருந்து 50% உயர்ந்திருக்கும் ஒரே ஒரு செய்தி போதும்.
இங்கு இட ஒதுக்கீட்டால் ஒரு சில குடும்பங்களே திரும்ப திரும்ப பயன் பெறுகிறார்கள் என்ற வாதத்தை அடித்து நொறுக்க.
அதுவும் 69% தான் இட ஒதுக்கீடு தான் என்னும் போது திறந்த போட்டியிலும் யார் வேண்டுமானாலும் பயன்களைப் பெறலாம்.
சிதம்பரம் கோயில் அர்ச்சகர் வேலை போல ஒரு சில குடும்பங்கள் மட்டும் வாய்ப்புகளை அபகரிக்க முடியாது.
சாதி முறை தான் பரம்பரை பரம்பரையாக
உயர் சாதிக் குடும்பங்கள் இன்பத்தை அனுபவிக்கவும்
ஒடுக்கப்பட்ட சாதிக் குடும்பங்கள் துயரங்களைச் சந்திக்கவும்
காரணமாக உள்ளது.
இட ஒதுக்கீடு என்பது இந்தச் சாதி முறையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் ஏற்பாடே.
நான் கேட்ட கேள்விக்குத் துல்லியமான பதிலையும் விளக்கத்தையும் தந்த Rajasekar MK, Santhosh Mohan ஆகியோர் புத்தகப் பரிசு பெறுகிறார்கள்! சரியான திசையில் விடையை அளித்த Sathya Narayaranக்கும் அன்புப் பரிசு உண்டு 🙂
பார்க்க… முகநூல் உரையாடல்