பதில்: 1970களில் மத்திய அரசு ஒரு விதி கொண்டு வந்தது.
அதாவது, இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தூரம் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் ஒரு சில நகரங்களில் குவியாமல் பல நகரங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விதி உருவானது.
அந்தக் காலத்தில் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.
1,2,3 சென்னை – மூன்று கல்லூரிகள்
4. செங்கல்பட்டு
5. சேலம்
6. கோவை
7. தஞ்சாவூர்
8. மதுரை
9. திருநெல்வேலி
இவற்றைத் தாண்டி 100 கிலோ மீட்டருக்கு அப்பால் புதிய கல்லூரி கட்ட தமிழ்நாட்டில் இடம் இல்லை.
திமுக அங்கம் வகித்த 1989 வி.பி.சிங் மத்திய அரசு ஆட்சிக் காலத்தில் இந்த விதி 10 கிலோ மீட்டர் என்று குறைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மருத்துவக் கல்லூரி கட்டுவது என்று திமுக அரசு கொள்கை முடிவு எடுக்கிறது.
தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் பெருகிய வரலாறு இது தான்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க மருத்துவக் கல்லூரிகள் பெருகவே திமுக தான் காரணம்.
ஒரு எம்பி கூட இல்லாமல் திமுக இதைச் சாதித்தது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள்.