கேள்வி: சாதி வாரி கணக்கெடுத்து 100% இட ஒதுக்கீடு நிறைவேற்றலாமே?
பதில்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் சாதி வாரி மக்கள் தொகை விவரம் பின்வருமாறு:
* பிற்படுத்தப்பட்ட சாதிகள் – 68%
* பட்டியல் இனத்தவர் – 20.01%
* பட்டியல் இனப் பழங்குடிகள் – 1.10%
எஞ்சி இருக்கும் முன்னேற்றப்பட்ட சாதிகள் = 10.89%
இந்த 10.89% இட ஒதுக்கீட்டை விட இப்போது இருக்கும் 31% பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு முன்னேற்றப்பட்ட சாதிகளுக்குச் சாதகமான ஒன்று தான். அதிலும் NEET, TET போன்ற குளறுபடித் தேர்வுகளை அறிமுகப்படுத்தினால் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை அள்ளலாம்.
அப்படியே மக்கள் தொகை அடிப்படையில் 100% இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் 2 விளைவுகள் வரும்:
1. எல்லா சாதிகளும் போட்டி போட்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். மாநிலத்தின் மக்கள் தொகை எகிறும். குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கும். பெண்கள் மீண்டும் பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாற்றப்படுவார்கள்.
2. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மோசடி நடைபெறும். ஆளாளுக்குத் தங்கள் தொகையை ஏற்றிக் காட்ட முனைவார்கள்.
தொடர்புடைய குறிப்புகள்:
* As per the 2011 Census of India, Scheduled Castes and Scheduled Tribes accounted for 20.01 percent and 1.10 percent of Tamil Nadu’s 72 million population. The Other Backward Classes (OBCs) formed 68% of the state’s population. தகவல் – விக்கிப்பீடியா, தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த குறிப்பு.
பார்க்க – முகநூல் உரையாடல்