• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / 10% இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தவறு? அது தான் SC/ST/BC/MBC இட ஒதுக்கீடில் கை வைக்கவில்லையே?

10% இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தவறு? அது தான் SC/ST/BC/MBC இட ஒதுக்கீடில் கை வைக்கவில்லையே?

January 11, 2019

கேள்வி: 10% இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தவறு? அது தான் SC/ST/BC/MBC இட ஒதுக்கீடில் கை வைக்கவில்லையே?

பதில்:

ஒரு கணக்கு சொல்றேன் சார்!

கவனமாகப் படியுங்கள். அப்போது தான் இது எவ்வளவு பெரிய உலக மகா பிராடு என்று புரியும்.

தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களின் எண்ணிக்கை 2900 (2018 நிலவரம்)

நீட் வருவதற்கு முன்பு தமிழக மருத்துவக் கல்லூரி நுழைவு நிலவரத்தைப் பார்க்கலாம்.

மொத்த இடங்கள்: 2900

31% பொதுப்பிரிவுப் போட்டி இடங்கள்: 899

இதில் OC என்று சொல்லப்படுகிற முன்னேறிய சாதியனர் பெற்ற இடங்கள் வெறும் 69.

மொத்தம் 2900 இடங்களில் இவர்களால் போட்டி போட்டு வெற்றி பெற வக்கு உள்ளது வெறும் 69/2999 = 2.38% இடங்கள் மட்டுமே.

இத்தனைக்கும் இவர்களே தரம் குறைந்தது, மனப்பாடம் செய்து வாங்கக் கூடியது என்று பழிக்கப்படுகிற மிக எளிமையான சமச்சீர் கல்வி syllabus.

இப்போது, 10% முன்னேறிய சாதி இட ஒதுக்கீடு வந்தால்,

மொத்தம் 2900 சீட்டில் தனியாக 290 சீட்டு இவர்களுக்கு ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

மீதம் பொதுப்பிரிவில் எஞ்சுவது

0.21*2900 = 609 இடங்கள் மட்டுமே.

இதில் 2016 நிலவரப் படி, 44 இடங்களை முன்னேறிய சாதிகள் பெற்றுள்ளார்கள்.

ஆக, முதலில் இந்த 44 இடங்களை முன்னேறிய சாதிகளுக்குக் கொடுத்து விட்டு மீண்டும் 290 இடங்களை அவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டில் தர வேண்டும்.

இப்போது இவர்கள் பெறக்கூடிய இடங்கள் 334.

இது 2900 இடங்களில் மொத்தம் 11.52% இடங்கள்.

முன்போ வெறும் 2.38% இடங்கள் மட்டுமே.

சரி, இவர்கள் பெறும் இடங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன.

முன்பு 69 இடங்களைப் பெற்றவர்கள் தற்போது 334 இடங்களைப் பெறுவார்கள்.

இது (334/69)*100 = 384% கூடுதல் இடங்கள்.

அதாவது, நான்கு மடங்கு கூடுதல் இடங்கள்.

ஆதிக்கச் சாதியினர் சட்டத்தை வளைத்து சுருட்டுகிற ஒவ்வொரு இடமும் BC/MBC/SC/ST மக்களுக்குக் கிடைக்க வேண்டியது.

அதாவது, உன் தட்டில் பரிமாறிய சோற்றில் கை வைக்க மாட்டேன். ஆனால், நீ சாப்பிட்டது போதும், சட்டியில் உள்ளதை எல்லாம் நான் வாரிச் சுருட்டிப் போகிறேன் என்ற கணக்கு இது.

தமிழ்நாட்டில் ~90% மக்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர்.

இவர்களுக்கு எப்படி 69% இட ஒதுக்கீடு போதும் என்று நீ தீர்மானிக்கலாம்?

ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி இடத்தின் மதிப்பு கூட விலை மதிப்பற்றது.

மத்தியப் பிரதேசத்தில் ஒழுங்காக மருத்துவக் கல்லூரி கட்டவும், அதற்கு நியாயமாக நுழைவுத் தேர்வு வைக்கவும் வக்கில்லாமல் வியாபம் ஊழல் என்று கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வட நாட்டுக்கு மருத்துவம் படிக்க அனுப்பும் பெற்றோர் பதைபதைப்போடு காத்திருக்கிறார்கள்.

யாரை எப்போது சாகடிப்பார் என்று தெரியவில்லை.

ஆனால், நீ ஏற்கனவே தரம், தகுதி என்ற பெயரில் நீட் சட்டம் கொண்டு வந்து இதே போன்று முன்னேறிய சாதிகளுக்கு பல நூறு இடங்களைக் கொள்ளை அடித்தாய்.

இப்போது உன் திருட்டுப் பசி வெறி அடங்காமல் 10% இடங்களை ஒதுக்கச் சொல்கிறாய்.

உட்கார்ந்து தின்று உடம்பு வளர்க்கிற திருட்டு எச்சைப் பொறுக்கி நாய்களே,

உனக்குத் தகுதி இருந்தால்,

நேருக்கு நேர் போட்டியில் இறங்கு.

அந்தக் காலத்தில் மன்னர்களுக்குக் கூட்டிக் கொடுத்து நிலங்களை வாங்கியது போல்,

இந்தப் பொழப்பு உனக்குத் தேவையா?

உங்களையே பல்லக்கு தூக்க வைத்து, அவன் சுருட்டிக்கொண்டு போவான்.

இதற்குப் பெயர் தான் பார்ப்பனீயம்!

(ஆதாரங்கள், கணக்கு போட்ட விவரம் மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1906