• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஏன்?

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஏன்?

September 29, 2018

கேள்வி: கல்வியில் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதாதா? ஏன் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு?

பதில்:

ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

அனைத்துச் சமூகங்களுக்கும் வேலை கொடுத்து அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்கப் புள்ளியாக கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.

1900களில் படித்த ஆளே இல்லை என்று தான் எல்லா வேலைகளையும் ஆதிக்கச் சாதிகள் சுருட்டினார்கள்.

இப்போது அனைவரும் படித்து வந்த பிறகு, தகுதியான ஆட்கள் இல்லை என்று வேலைகளைச் சுருட்டுகிறார்கள்.

உன்னைப் படிக்கவும் வைத்து வேலையும் தர வேண்டுமா என்ற கேள்வி தவறு மட்டுமல்ல, மீண்டும் இட ஒதுக்கீட்டு வரலாற்றை 100 ஆண்டுகள் பின்னே இழுத்துச் சென்று நிறுத்தும்.

கல்வியுடன் மட்டும் இட ஒதுக்கீட்டை நிறுத்தினால், ஒருவர் ஏணியின் முதல் படியில் ஏறியவுடன் அவரைத் தள்ளி விடுவதற்கு ஒப்பாகும்.

வேலைவாய்ப்பிலும் உயர் பொறுப்புகளில் பல்வேறு சமூகத்தினர் இடம் பெற முடியவில்லை என்பது அவர்கள் தகுதி, திறமை, வாய்ப்புகளோடு தொடர்புடையது அன்று.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பிற சாதியினர் எத்தனையோ பேர் துறைத்தலைவர்களாகவும் விருது பெற்ற அறிஞர்களாகவும் திகழும் போது, இந்தியாவில் உள்ள IIT, IIM, மத்திய பல்கலைகளில் பணியாற்ற மட்டும் தகுதியான ஆட்கள் எப்படி கிடைக்காமல் போனார்கள்?

இங்கு தெளிவாகவே சாதி, சமயப் பாகுபாடு நிலவுகிறுது. அந்தப் பாகுபாட்டை ஒழிக்க ஒரே வழி:

அடிக்கு அடி, உதைக்கு உதை, Legalக்கு Legal என்று கேப்டன் வழியில் இடத்துக்கு இடம் ஒதுக்குவதே.

அப்படிச் செய்யாதவரை, ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருப்பார்கள்.

நம் ஊரில் மட்டும் உள்ள உலகம் முழுக்கவே கருப்பர்கள், பெண்களும் இந்தச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

இதனைத் தடுக்க சில நாடுகளில் மட்டும் தான் இட ஒதுக்கீடு தருகிறார்கள். அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் பயிற்சி, விழிப்புணர்வு, சிறப்புப் புள்ளிகள் என்று பேசிப் பேசியே திருத்தப் பார்க்கிறார்கள். ஆனால், இடத்துக்கு இடம் கொடுக்காதவரை இந்தப் பாகுபாடு நிலவிக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல பதவி உயர்விலும், தனியாரிலும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்கள்.

பாகுபாட்டின் இயங்கியலைப் புரிந்து கொண்டு மிகத் தெளிவாக இடத்துக்கு இடம் மட்டும் தான் நீதி என்று சட்டம் இயற்றிய நம் அரசியல் தலைவர்கள் மாபெரும் மேதைகள்.

தொடர்புடைய செய்திகள்:

  • Analysis: Blacks largely left out of high-paying jobs, government data shows
  • EU to push for 40% quota for women on company boards

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1538