கேள்வி: விஜய்ணா ரசிகர்களைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இருக்கிறதா? இந்த முட்டாள்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
பதில்: முட்டாள்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
அறிவாளிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் என் கவலை.
இயற்பியல், உயிரியல் போல அரசியலும் ஒரு அறிவியல் தான்.
அதை முறையாகப் பயின்றால் சரியான நிலைப்பாடு எடுக்கக் கூடிய எத்தனையோ அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் விஜய்ணா ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அவர்களிடம் உரையாடவும் முறையாக அரசியலைப் பயிற்றுவிக்கவும் நாம் தவறியதால் தான் அவர்கள் தவறான ஆட்கள் பேசும் போலி அரசியல் பின் செல்கிறார்கள்.
நவீன மருத்துவத்தின் அருமை தெரியாமல் ஏமாற்று மருத்துவத்தின் பின் போவது போல் தான் இது.
அவர்களாகவே பட்டுத் திருந்துவார்கள் என்று விடாமல், இன்னும் தீவிரமாக நாம் அரசியல் பேச வேண்டிய தேவையைத் தான் உணர்கிறேன்.