நான் அறிஞர் அண்ணாவைப் படித்துப் புரிந்து கொண்ட வரையில்,
அவருடைய வடநாட்டு எதிர்ப்பு என்பது,
* இந்தியைத் திணிக்கும் மொழி ஆதிக்கத்திற்கு எதிரானது
* தில்லியில் அதிகாரத்தைக் குவிக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரானது
* வட நாட்டு முதலாளிகள் கொழுக்க தமிழ்நாட்டைச் சந்தையாகப் பயன்படுத்தும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரானது
* பார்ப்பன – பனியா சாதி ஆதிக்கத்திற்கு எதிரானது
வட நாட்டு எதிர்ப்பு என்பது ஆதிக்க எதிர்ப்பாக இல்லாமல்,
பிழைக்க வழியில்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்த சாமானியர்களை இழிவாகப் பார்க்கும் தமிழின ஆதிக்கப் பெருமையாக இருந்தால்,
நாம் அறிஞர் அண்ணாவின் தம்பி தங்கைகள் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
பார்க்க – முகநூல் உரையாடல்