நீங்கள் ஒரு குழுவின் பிரதிநிதியாகச் செல்கிறீர்கள் என்றால்,
கடைசி வரை உங்கள் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு முன்னும் பின்னும்,
சாதி அதே சாதி தான்.
பெண் எப்போதும் பெண் தான்.
மாற்றுத் திறனாளி தொடர்ந்தும் அதே இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறார்.
ஆனால்,
ஒரு ஏழை வேலையில் சேர்ந்த பிறகு பணக்காரராக மாறி விடுகிறாரே?
குறைந்தபட்சம், அதே சம்பளம் பெறும் மற்றவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் ஈடாகி விடுகிறாரே?
பிறகு அவரை யாரின் பிரதிநிதி என்று கணக்கெடுப்பது?
ஒருவரின் அடையாளம் மாறக் கூடியது என்றால்,
அதனை அவரின் முதன்மை அடையாளமாகக் கருதி இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
பார்க்க – முகநூல் உரையாடல்