கேள்வி: இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அமையக் கூடாது, சாதியால் அதிகம் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறார்களே?
பதில்:
யார் இப்படிச் சொல்கிறார்களோ அவர்களையே மக்கள் தொகை தான் அடிப்படை என்று சொல்ல வைக்க முடியும்.
எப்படி?
1989 வரை SC/ST இட ஒதுக்கீடு தனித்தனியாக இல்லாமல் ஒரே பிரிவாக 18% இருந்தது.
அதைப் பிரித்த போது ஆளுக்கு 9% என்று அல்லவா பிரித்து இருக்க வேண்டும்?
ஏன் SCக்கு அப்படியே 18% கொடுத்து விட்டு, STக்குத் தனியாக 1% கொடுத்தார்கள்?
ST மக்கள் குறைவாக வஞ்சிக்கப்பட்டார்கள், அவர்களுக்கு இவ்வளவு வாய்ப்புகள் கொடுத்தால் போதும் என்றா வெறும் 1% கொடுத்தார்கள்?
அவர்கள் மக்கள் தொகை 1% தான் இருந்தது. ஆகவே, 1% இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்.
இப்போது SCA மக்கள் கடைநிலையிலும் கடைநிலையில் உள்ளார்கள் என்று ஏற்றுக் கொள்கிற பிற SC மக்கள் கூட,
3%க்கு மேலே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஒப்ப மாட்டார்கள்.
ஏன்?
SCA மக்கள் அவ்வளவு பேர் இல்லை, மற்ற சாதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இதற்கு மேல் கொடுக்கக் கூடாது என்பார்கள்.
ஆக, தங்கள் பங்கைக் கொடுக்கும் போது மட்டும் மக்கள் தொகை கணக்கு பார்க்கிறவர்கள், அடுத்தவர்கள் பங்கைக் கோரும் போது மட்டும் மக்கள் தொகையைப் பார்க்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்?
தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?
உண்மை என்னவென்றால்,
தமிழ்நாட்டில் 20% உள்ள SC மக்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டின் பயன் 90% SC மக்களுக்குச் சென்று சேர்கிறது.
தமிழ்நாட்டில் 1% உள்ள ST மக்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டின் பயன் 100% ST மக்களுக்குச் சென்று சேர்கிறது.
வேறு எந்தப் பிரிவிற்கும் இப்படி வழங்கப்படவில்லை.
சாதியால் அதிகம் வஞ்சிக்கப்பட்ட SC, ST மக்களுக்குத் தான் அதிகம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை ஆகும்.
பார்க்க – முகநூல் உரையாடல்