“எங்கள் சாதியினரிடம் நிலம் இல்லை, காசு இல்லை, தொழில் இல்லை…
ஆகவே, கூடுதல் இட ஒதுக்கீடு கொடு”
என்று கேட்கிறார்கள்.
இதற்குப் பெயர் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு.
இதைச் சாக்காக வைத்து,
ஏற்கனவே உங்கள் சாதிகளில் கொஞ்சம் நஞ்சம் பணம் இருக்கிற ஆட்களை இட ஒதுக்கீட்டில் இருந்து வெளியேற்றுவார்கள்.
இதற்குப் பெயர் Creamy layer.
ஏற்கனவே OBC மண்டையில் இந்த Creamy layer மிளகாயை அரைத்து விட்டார்கள். அடுத்து SC/ST மண்டைகளில் அரைக்கக் காத்திருக்கிறார்கள்.
நாங்களும் ஏழைகள் தான் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு ஏற்கனவே இருக்கிற பொதுப் பிரிவு இடங்களில் இருந்து,
உயர் சாதியினர் 10% பிராடு ஒதுக்கீட்டினைச் சுருட்டிக் கொண்டு போகிறார்கள்.
இந்தச் சூழ்ச்சி எல்லாம் புரிந்ததால் தான் அண்ணல் அம்பேத்கர், பெரியார் போன்றோர் பொருளாதாரத்தை ஒரு அளவு கோலாக ஏற்றுக் கொள்ளவில்லை.
கல்வி மற்றும் சமூக அடிப்படைகளில் மட்டுமே பின்தங்கிய நிலையை வரையறுத்தார்கள்.
ஆகவே, மீண்டும் மீண்டும் இந்த வாதத்தை முன்னெடுக்காதீர்கள். இது உங்களுக்கு எதிராய் தான் முடியும்.
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள் இல்லை.
பார்க்க – முகநூல் உரையாடல்
தொடர்புடைய செய்திகள்: