பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்?
BCக்குள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களான இசுலாமியருக்கும்
SCக்குள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களான அருந்ததியருக்கும்
தருவது போல் ஏதோ உள் ஒதுக்கீடு என்று தானே தோன்றும்!
SC/ST/BC/MBCஐ விட பொதுப்பிரிவு ஏழைகளின் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்?
ஆனால், எல்லா ஏழைகளுக்கும் கிடையாது, உயர் சாதிகளுக்குத் தான் என்றார்கள்.
அட போனால் போகிறது,
அந்த உயர் சாதிகளாவது நன்கு படித்து, திறமையான ஆட்களாக இருப்பார்களா என்று பார்த்தால் Cut-off STக்குக் கீழே போகிறது!
இது பொதுப்பிரிவு ஏழைகளுக்கான உள் இட ஒதுக்கீடு இல்லை!
இது உயர் சாதிகளுக்கான தனி ஒதுக்கீடு!
ஒரே ஒரு மார்க் வாங்கிக் கொண்டு கடைசியாக ஒரு உயர் சாதிக்காரன் வந்தாலும் அவனுக்கும் இடம் ஒதுக்கி வைத்திருப்பார்கள்!
அந்த அரிய வகை ஏழை,
ஒரு நாள்,
தான் தான் முழு தகுதி வாய்ந்த மருத்துவர் என்று உங்களை ஊசி போட்டு வைகுண்டம் அனுப்பி வைப்பார்.
பார்க்க… முகநூல் உரையாடல்