கேள்வி: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி?
பதில்:
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று பாஜக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறது.
தற்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
முதலில், அது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற வேண்டும்.
பிறகு, அது அரசியல் சாசனப்படி செல்லும் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொருளாதார இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும்,
தற்போது நடைமுறையில் இருக்கிற 49%க்கு மேல் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றும்,
நீதிமன்றம் பல வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது.
இதெல்லாம் தெரிந்தும், பாஜக ஏன் இந்த அறிவிப்பை விடுகிறது?
ரபேல் ஊழலில் பாஜகவை வறுத்தெடுக்கிறார்கள்.
அதில் இருந்து பேச்சை மாற்ற இந்த அறிவிப்பு உதவும்.
நாங்கள் முன்னேறிய சாதிகளுக்கும் ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வர முயன்றோம்; எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன; இந்த ஏழைத்தாயின் மகனுக்கு வாக்கு அளியுங்கள் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒப்பாரி வைக்க வசதியாக இருக்கும்.
இந்த அறிவிப்பு ஒரு அரசியல் ஸ்டன்ட்.
பார்க்க… முகநூல் உரையாடல்