பணக்காரப் பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்கொள்வது இல்லையா?
இல்லை, ஏழை ஆண்கள் தான் பெண்ணியம் பேணும் காவலர்களாக மாறி விட்டார்களா?
ஆணாதிக்கம் என்பது ஆணாகப் பிறப்பதினாலேயே,
இந்தச் சமூகத்தின் வளர்ப்பினாலேயே,
வரலாற்றின் காரணமாகவே,
அந்த ஆணுக்குள் இயல்பாக உறைந்திருக்கும் குணமாக இருக்கிறது அல்லவா?
எப்படி ஆணோடு இணைந்து ஆணாதிக்கம் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டால்,
சாதியோடு இணைந்து சாதி ஆதிக்க உணர்வு எழும் என்பதும் புரியும்.
பிறப்பின் காரணமாக எழும் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் அடிப்படையிலான ஆதிக்க உணர்வினைப் பணம் ஒழித்து விடுமா?
ஒரு படிக்காத, ஏழையான குதிரை வண்டிக்காரர் கூட,
வெளிநாட்டில் படித்து, கோட்டும் சூட்டும் அணிந்து, அரச அதிகாரியாக வந்த அண்ணல் அம்பேத்கரை,
சாதியின் காரணமாக மதிக்க மறுத்த நாடு தான் இது.
எனவே தான்,
சாதி ஆதிக்கத்தைத் தடுப்பதற்காக உள்ள ஒதுக்கீட்டில்,
பணக்காரன் என்பதற்காக ஒருவரை விலக்காதே!
ஏழை என்பதற்காக ஒருவரைச் சேர்க்காதே!
என்கிறோம்.
பார்க்க – முகநூல் உரையாடல்