• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / சாதி / நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே?

நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே?

November 14, 2018

கேள்வி: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி சரி. ஆனால், நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே?

பதில்:

இன்று தரம் தரம் என்று குரைப்பவர்களின் வரலாறு என்ன?

* 1854இல் ஆங்கிலேயே அரசு 45% எடுத்தால் தான் தேர்ச்சி என்று வரையறை செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகள் தேர்வுற முடியவில்லை என்று 33%ஆக மாற்றுமாறு மதராசு மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மன்றாடினார்கள்.

* 1920கள் வரை கல்வி கற்று வந்து முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை உயர் சாதி இந்துக்கள் just pass எடுக்கவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

* ஆங்கிலேயே அரசு 1822லும் 1824லும் எடுத்த கணக்கெடுப்பில் ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் கூட கல்வி கற்கவில்லை. கல்வி கற்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களும் கணக்கப்பிள்ளை வேலைகள் செய்து வந்தோரும் தான். இவர்களுக்குக் கல்வி கற்பிக்க விடாமல் உயர் சாதி இந்துக்கள் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்தனர்.

அவர்கள் நமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த சிஸ்டத்துக்குள் புகுந்து விட்டார்கள். நாம் இப்போது தான் நுழைகிறோம்.

முதல் தலைமுறை இப்படித் தான் இருக்கும். அவர்கள் Fail ஆகி fail ஆகி arrears வைத்து கூட படிக்கட்டும். படித்த உடனே வேலை கிடைக்கவில்லையா, பரவாயில்லை! ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து கூட கிடைக்கட்டும்.

ஒவ்வொரு தலைமுறையிலும் கல்வியின் தரத்தைக் கூட்ட அரசு முனைந்தால் போதும். சூழ்ச்சிப் பரப்புரைக்கு இரையாகி உங்கள் படிப்பு மட்டம் என்ற தாழ்வு மனப்பான்மையை வள்த்துக் கொள்ளாதீர்கள்.

(ஆதாரம்)

https://www.facebook.com/ravidreams/videos/10158071061483569/?t=0
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1784