• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா?

நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா?

May 1, 2019

கேள்வி: நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா?

பதில்:

நீங்கள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக திமுகவை ஆதரிக்கிறீர்கள். ஆனால், நான் திமுகவை ஆதரிப்பதற்கு 1000 காரணங்கள் உள்ளன.

திமுக அசிங்கம் இருந்தாலும் ஆதரித்துத் தொலைவோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் தான் அதை விட்டு விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

அதனால் தான் கடந்த காலங்களில் 2G, ஈழம், வாரிசு அரசியல், வாஜ்பாயுடன் கூட்டணி என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, கலைஞருடன் துணை நின்றிருக்க வேண்டிய வேளைகளில் எல்லாம் அவரை அம்போவென விட்டோம். எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்போது அனுபவிக்கிறோம்.

தான் அறிவுஜீவி என்று நிறுவிப் பிழைக்க வேண்டியவர்கள் திமுக எதிர்ப்புக்குக் காரணங்களைத் தேடட்டும்.

என் சிறு மூளையை விட ஒரு நூற்றாண்டாக தமிழினத்துக்காகப் போராடும் இயக்கத்தின் தலைமையை நம்புகிறேன்.

தமிழர் நலனைக் காக்க திமுகவை விட இன்னொரு சிறப்பான கட்சி உண்டு என்னும் நிலை வரும் வரை, திமுக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஆதரிப்பேன்.

பி.கு: திமுக என்றுமே தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்த வரலாறு தான் உண்டு. தேர்தலுக்குப் பின்பு செய்ததில்லை. #GoBackModi நண்பர்கள் கவலைப்பட வேண்டாம்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2017