The Law of the Vital Few என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு சிறிய வட்டத்திடம் பெரும்பான்மை வளங்களோ, அதிகாரங்களோ குவிந்திருக்கும். இதை நீங்கள் 80/20 விதி என்றும் கேள்விப்பட்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, அமெரிக்காவில் 99% ஏழைகளை 1% பணக்காரர்களின் முடிவுகள் கட்டுப்படுத்துவதாக ஒரு போராட்டம் பரவியது.
இங்கே உள்ள வாக்கெடுப்பு முடிவுகளைப் பாருங்கள். தமிழகத்தின் மனநிலைக்கு எதிரான, நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்து நிலைப்பாடுகளுக்கும் 3% ஆதரவு தொடர்ந்து தென்பட்டுக் கொண்டே இருக்கிறது . அவர்களிடம் தான் கண்ணுக்குப் புலப்படாத அதிகாரமும் குவிந்திருக்கிறது.
இதைத் தான் பெரியார் தொடங்கி ஒரு நூற்றாண்டாக திராவிட இயக்கம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
We are the 97%. We belong to the Dravidian Stock.










