ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளைப் படாத பாடு படுத்தி தர ஆய்வு செய்கிறார்கள். மருத்துவம் படிக்கக் கனவு காணும் மாணவர்கள் செத்துப் போகிறார்கள்.
அப்போது எல்லாம் மருத்துவக் கல்லூரி இடங்களை உயர்த்தாமல்,
இப்போது சில உயர் சாதியினர் படிப்பதற்கு இலஞ்சமாக,
மற்றவர்களுக்கும் சில இடங்களைக்கூட்டிக் கொடுப்பார்கள் என்றால்,
ஏன் இத்தனை நாளாக அதைச் செய்யவில்லை?
இப்போது எங்கே போனது தரம்?
உயர்சாதி ஆட்கள் படிக்க எத்தனை இடங்களை வேண்டுமானால் உருவாக்கலாம் என்றால்,
தமிழர்கள் அனைவரும் படிக்கட்டும் என்று தமிழ்நாடு முழுக்கக் கல்லூரிகளைத் திறந்து விட்டதில் என்ன தவறு?
நாங்கள் திறக்கும் கல்லூரிகளை மட்டும் ஏன் தரம் இல்லை என்கிறீர்கள்?
பார்க்க… முகநூல் உரையாடல்