கேள்வி: தி.மு.க வை தாண்டி திராவிடத்தை நிலைப்படுத்தும் தேவை இருக்கிறதா?
பதில்: வாக்கரசியல் களத்தில் மட்டும் தான் தி.மு.க. இருக்கிறது. சமூகக் களத்தில் தி.க, மற்ற பெரியார் அமைப்புகள்.
அரசியலில் மட்டும் இடத்தைப் பிடிக்கவே நீதிக்கட்சி தொடங்கி நூறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. அதுவும் தமிழக அரசியல் அளவில் மட்டும் தான் என்பதால் முழுமையான தன்னாட்சி நிலை கிடையாது.
கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தத்துவம், ஊடகம், ஆன்மிகம் , வணிகம் என்று இன்னும் பல களங்களில் திராவிடம் முளைவிடவே இல்லை. இங்கெல்லாம் உள்ள பார்ப்பனிய ஆதிக்கம் ஏற்கனவே நாம் அரசியலில் பெற்றுள்ள இடத்தையும் வெட்டிச் சாய்க்கவல்லது.
இன்னும் 10 நூற்றாண்டுகளுக்காவது திராவிட இயக்கத்துக்கு வேலை இருக்கிறது.