கேள்வி: தி.மு.க எதற்காக தனித்தொகுதியை தவிர பொதுத் தொகுதிகளில் SC/ST வேட்பாளர்களை நிறுத்தவில்லை?
பதில்:
நிறுத்தினால் தோற்றுவிடுவார்கள். அதனால் தான் நிறுத்தவில்லை.
திருமா போன்ற பெரிய தலைவர்களே தனித்தொகுதியில் கூட போராடித் தான் வெல்ல வேண்டியிருப்பதே சாட்சி.
பொதுத் தொகுதியில் நின்ற அண்ணா, ஸ்டாலின், காமராசர், ராகுல் போன்ற மாபெரும் தலைவர்களே தோற்றுப் போன வரலாறு உண்டு.
இங்கு, கலைஞரைத் தவிர தேர்தல் தோல்வியைச் சந்திக்காத தலைவர் என்று எவரும் கிடையாது.
தலித்கள் எளிமையாக வெல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் தலித் தொகுதி. அதனால் தான் ஆ. ராசாவைக் கூட பாதுகாப்பான தொகுதியில் நிறுத்துகிறார்கள்.
இன்றைய சமூகம் அப்படித் தான் polarised நிலையில் உள்ளது. இராமநாதபுரம் தொகுதியில் RSS ஆட்கள் “துலுக்கனுக்கா உங்கள் ஓட்டு” என்று தான் பிரச்சாரம் செய்கிறார்கள். தலித்கள் பொதுத் தொகுதியில் நின்றால் இதே பிரச்சாரம் சாதியின் அடிப்படையில் நிகழும்.
இன்றைய பாராளுமன்றத்தில் FC சாதியினர் 242 பேர். SC/STக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மட்டுமே அவர்களுக்கான பிரிதிநிதித்துவம் கிடைத்துள்ளது. நாட்டில் குறைந்தது 50% மக்கள் தொகை இருக்கக் கூடிய OBCக்களுக்கு 120 தொகுதிகள் தான் கிடைத்துள்ளது. அதாவது 22% பிரதிநித்துவம் மட்டுமே. இதில் ஏறத்தாழ 33% தமிழ்நாட்டில் இருந்து மட்டும் செல்கிறார்கள். இவர்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்துச் சாதிகளுக்காகவும் பேச வேண்டும்.
அரசின் கல்வி, வேலைவாய்ப்பிலும் இதே நிலைமை தான். 27% OBC கொடுத்த பிறகும் கூட அதனை முழுமையாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்கிறார்கள். இங்கு பார்ப்பனீயம் தின்று செரித்தது போக எஞ்சிய இடங்கள் தான் மற்ற சாதிகளுக்கு. இன்று ஆதிக்கம் புரிவதாய் தெரியும் இடைநிலைச் சாதிகளின் பங்கு எந்த நொடியும் அடித்து நொறுக்கப்படலாம்.
இப்படி ஒரு அவலநிலை சமூகத்தின் கடைமட்டத்தில் இருக்கும் தலித்களுக்கும் பழங்குடிகளுக்கும் நேரக்கூடாது என்று தரப்பட்டது தான் இட ஒதுக்கீடு.
அந்த அரசியல் சாசன உரிமையை நிம்மதியாக அனுபவிக்காமல், அதையும் ஏதோ தீண்டாமை போல் எண்ணி ஒப்பாரி வைக்க வேண்டாம்.
பார்க்க… முகநூல் உரையாடல்