தில்லி பல்கலையில் உயர் சாதிகளுக்கான 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த புதிதாக 6000 இடங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால், 3756 விண்ணப்பங்கள் தான் வந்துள்ளன. குறைந்தது 12,000 விண்ணப்பங்களாவது வந்தால் தான் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமாம்.
எனவே, அவர்கள் அரிய வகை ஏழைகளைத் தேடி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
இதெல்லாம் கேலிக்கூத்தாக இல்லையா?
எங்காவது SC/ST/BC/MBC மக்கள் போதுமான அளவு விண்ணப்பிக்கவில்லை என்ற நிலை இருந்ததா? அப்படியே இருந்தாலும் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அவர்களைச் சேர்ப்பதற்கு ஏதாவது முயற்சிகள் எடுத்தார்களா?
அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடே தேவையில்லை என்பதைத் தான் இந்தச் செய்தி காட்டுகிறது.
பிறகு எதற்கு இட ஒதுக்கீடு?
மருத்துவம், IIT, IIM போன்ற படிப்புகள்,
உயர் பதவிகளுக்கான அரசு வேலைகள்
என்று கடும் போட்டி நிலவும் இடங்களில் வாய்ப்புகளைச் சுருட்டிக் கொள்ளத் தான் இந்த பிராடு ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
(செய்தி இணைப்பு மறுமொழியில்)
பார்க்க… முகநூல் உரையாடல்