கேள்வி: திறமையின் அடிப்படையில் மோதாமல் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?
பதில்:
ஆணுக்கும் பெண்ணுக்கும் எதற்குத் தனித் தனியாக குத்துச் சண்டைப் போட்டி? மேரி கோமுக்குத் திறமை இல்லை என்று எந்த ஆண் குத்துச் சண்டை வீரராவது சொல்வாரா?
எல்லாரும் திறமையுடன் தான் மோதுகிறார்கள். ஆண்கள் ஆண்களுடன் பெண்கள் பெண்களுடன், SC – SC, ST – ST, BC – BC, MBC – MBC உடன் தான் போட்டி.
Junior junior உடன், sub junior sub junior உடன் எடைக்கு ஏற்ப மோதுவது போல, சாதி அடிப்படைப் பிரிவுகளின் கீழ் போட்டி இடுகிறார்கள்.
எப்படி ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று அடக்கி வைத்தார்களோ அது போலவே சாதிக்கு ஒரு நீதி என்று அடக்கி வைத்திருந்தார்கள். அதனால் தான் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடும் போட்டியும் சமூக நீதியாக வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குத் திறமை இல்லை என்று இல்லை. அவர்கள் இன்னும் வளர்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். 2000 ஆண்டுகளாக உட்கார்ந்து தின்று கொழுத்து விட்டு Senior பிரிவில் வந்து என்னுடன் மோது என்று அழைப்பது தான் திறமையா? வீரமா?
தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் முறையாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய பிறகு இன்று பொதுப்பிரிவிலும் எல்லா பிரிவு மாணவர்களும் இடங்களை அள்ளுகிறார்கள். இந்த வயிற்றெரிச்சல் பொறுக்காமல் தான் நீட் போன்ற தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.
அதாவது, நாம் திறமையைப் பெறும் நிலை வரும் போது, நாம் பெற்றிருப்பது திறமையே இல்லை என்று goal postஐ நகர்த்தி விடுவார்கள்
பார்க்க… முகநூல் உரையாடல்