கேள்வி: நான் சாதி மாறி திருமணம் செய்தால் இட ஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
பதில்:
இட ஒதுக்கீடு என்பது சாதியோடு தொடர்பு உடையது. சாதி உங்கள் பிறப்போடு தொடர்பு உடையது. திருமணம் செய்தாலும் உங்கள் சாதி மாறாது.
எனவே, சாதி மாறி திருமணம் செய்தாலும் உங்களுக்கு உங்களின் சாதியின் அடிப்படையில் எப்போதும் என்ன இட ஒதுக்கீடு கிடைத்ததோ அதே தான் கிடைக்கும். உங்கள் மனைவி/கணவர் சாதியின் அடிப்படையில் இடம் பெற முடியாது.
உங்கள் குழந்தையின் சாதி என்ன என்பது தான் அடுத்த முக்கியமான கேள்வி.
பெரும்பாலான நீதிமன்றத் தீர்ப்புகளும் சட்டமும், தந்தையின் சாதியே குழந்தையின் சாதி என்று சொல்கின்றன.
தந்தை முன்னேறிய சாதியாக இருந்து
தாய் BC/SC/ST சாதியாக இருந்து
குழந்தை அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற விரும்பினால்,
அந்தக் குழந்தை பெரும்பாலும் தாயின் சாதியினர் வளர்ந்த சூழலில் வளர்ந்ததால் தாய் எதிர்கொண்ட சாதிப் பாகுபாடுகள் அனைத்தையும் எதிர்கொண்டார் என்று நிறுவும் வண்ணம் ஆதாரங்களை முன்வைத்தால், உள்ளூர் அலுவலர் முடிவுக்கு ஏற்ப தாயின் சாதியைச் சான்றிதழில் பெற முடியும்.
தமிழக அரசு, தாய் தந்தை இருவரின் சாதியில் விரும்பிய சாதியைக் குழந்தை தேர்ந்தெடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், அந்தத் தெரிவும் மேற்கண்ட நிபந்தனைக்கு உட்பட்டதே.
இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ரோகித் வெமுலாவின் சாதி பற்றிய சர்ச்சையைப் பார்க்கலாம்.
ரோகித் வெமுலாவின் தாய் SC. தந்தை OBC. எனவே, ரோகித் வெமுலா தலித்தே இல்லை, அவரின் தற்கொலைக்கு பட்டியல் இனத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்கள்.
ஆனால், ரோகித் வெமுலாவின் தந்தை இளவயதிலேயே குடும்பத்தை விட்டுச் சென்று விட்டார். ரோகித் அவரது தாயின் குடும்பத்தவர் வாழ்ந்த சூழலிலேயே முழுக்கவும் வளர்ந்தார். வாழ்நாள் முழுக்க சாதிப் பாகுபாடுகளை எதிர்கொண்டார். எனவே, அவர் SC என்பது செல்லும் என்று இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்:
-
-
- Upbringing key to right to quota in inter-caste marriages
- Child can adopt caste of either parent: HC
- Caste Of A Child Born To Inter-Caste Couple Could Depend Upon The Circumstances In Which The Child Was Brought Up: AP HC
- Caste decided by birth, can’t be changed by marriage: SC
- Legal position on Rohith Vemula’s caste: he has the right to choose
- The Tahsildar vs Arivudai Senthil on 1 February, 2010 – சாதி மாறிய திருமணத்தில் இட ஒதுக்கீடு பற்றிய தமிழக அரசாணை விவரம்.
-
பார்க்க – முகநூல் உரையாடல்