கலப்பு மணம் புரிந்த தம்பதியருக்குப் பிறந்தது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அதில் தாய் அல்லது தந்தையின் சாதியில் எதுவொன்றை மூத்த குழந்தைக்குச் சூட்டப்பட்டதோ, அதே சாதியே அடுத்தடுத்த குழந்தைக்கும் சூட்டப்பட வேண்டும்.
மாறாக, ஒரு பிள்ளைக்குத் தாயின் சாதியும், ஒரு பிள்ளைக்குத் தந்தையின் சாதியும் சூட்ட விரும்பினாலும் சூட்ட முடியாது. அவ்வாறில்லாமல் நான் சாதிகளில் நம்பிக்கை இல்லாதவர் எனச் சொல்லிக் கொண்டு, இருவரின் சாதியை விட்டுவிட்டு மூன்றாவது சாதியைச் சூட்டிக் கொள்வேன் எனவும் சொல்ல இயலாது.
முதல் குழந்தைக்கு பெற்றோரின் சாதியில் என்ன சாதி சூட்டப் பட்டதோ, அதே சாதிதான் அடுத்தடுத்த குழந்தைக்கும் சூட்டப்பட வேண்டுமென ஏற்கனவே விதிகள் உள்ளன.
மேலும் மனிதன் தனது தனிப்பட்ட அடையாளங்களில் எதை வேண்டுமானாலும் (மதம் உள்பட) மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சாதியை மட்டும் மாற்றிக் கொள்ள முடியாது. அதற்கு விதிகளில் வழியில்லை.
அதேபோல் ஒருவர் இருந்த சூழ்நிலை, வளர்ந்த சூழ்நிலை ஆகியன வைத்து சாதியை மாற்றிக் கொள்கிறேன் எனச் சொல்வதும் முடியாது. இந்த விஷயம் மதம் மாற்றிக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும்.
எனவே ஒருவர் இன்ன சாதியைச் சேர்ந்தவரென தீர்மானித்து ஒருமுறை சான்றளிக்கப்பட்டு விட்டால், அவரே விரும்பினாலும் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது.
எழுதியவர் – திரு. சந்திர மோகன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர்.
பார்க்க – முகநூல் உரையாடல்