பதில்:
நேரு தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
காங்கிரசு 1952-71 தொடர்ச்சியாக 5 முறை ஆண்டிருக்கிறது.
6 முறை தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
4 முறை கூட்டணி ஆட்சிகளைச் செலுத்தி இருக்கிறது.
நல்லதோ கெட்டதோ நாட்டின் நிறுவனங்களைக் கட்டமைக்க இந்தத் தொடர்ச்சியும் வலுவான அடித்தளமும் முக்கியம். ஒரு அரசே போனாலும், இந்த நிறுவனங்கள் தான் நாட்டைக் கட்டிக் காக்கும்.
இப்படி எல்லாம் கட்டமைத்த நாட்டைத் தான் மோடி நான்கே ஆண்டுகளில் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறார்.
முதல்வர் ஆன ஒரே ஆண்டில் அண்ணா இறந்தார்.
1976ல் கலைக்கப்பட்ட திமுக ஆட்சி மீண்டும் நிலைத்தன்மைக்கு வருவதற்கு 20 ஆண்டுகள் தேவைப்பட்டன. அதற்குப் பிறகு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தன.
ஒவ்வொரு முறையும் அதிமுக செய்த நிர்வாகச் சீர்கேடுகளையும் கொள்கைப் பின்னடைவுகளையும் நேர் செய்வதற்கே திமுகவுக்குக் காலம் சரியாக இருந்தது. ஒரு வள்ளுவர் சிலையை நிறுவவே கலைஞர் கால் நூற்றாண்டு காத்திருந்து போராட வேண்டி இருந்தது.
நாம் வியந்து பேசுகிற சிங்கப்பூரை 50 ஆண்டுகளாக ஒரே கட்சி தான் ஆட்சி செய்கிறது.
ஒரு கட்சி மொத்தமாக எத்தனை ஆண்டுகள் ஆண்டது என்பதைக் காட்டிலும் அதை எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆள விட்டீர்கள் என்பது முக்கியம்.
வாய்ப்புகளைத் தந்து விட்டு கேள்விகளைக் கேட்போம்.