மக்களாட்சியில் தலைக் கணக்கு தான் எல்லாம்.
நாம் எவ்வளவு தான் மாநில சுயாட்சி பேசினாலும் தனி ஒரு மாநிலமாகச் சாதிப்பது கடினம்.
ஆந்திரா, கேரளா, கருநாடகத்துடன் நமக்கு எவ்வளவு தான் வாய்க்கால் வரப்பு பஞ்சாயத்துகள் இருந்தாலும்,
மாநில உரிமைகள் என்று வரும் போது அவர்களுடன் இணைந்து தான் தில்லிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டி வரும்.
பிற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேசியக் கூட்டணிகள் அமைத்துத் தான் பலமான தேசியக் கட்சிகளை எதிர்க்க முடியும்.
மாநிலங்கள் ஒற்றுமை இன்றி சிதறினால்,
தில்லிக்குத் தான் இலாபம்.
இதே போல் தான் சாதிகளும்.
ஒவ்வொரு சாதிக்கும் இன்னொரு சாதியுடன் எத்தனையோ முரண், பகை இருக்கலாம்.
ஆனால், இந்தச் சாதிகள் எல்லாம் இணைந்து குரல் கொடுத்தால் தான் சாதியின் உச்சாணிக் கொம்பில் இருப்போரின் அதிகாரத்தைக் குறைக்க முடியும்.
அதனால் தான் திராவிடம் 97 vs 3 என்று படை திரட்டியது.
இதனை SC vs BC+MBC என்று மாற்றி விடுகிறவர்களின் நோக்கம் 3%க்கு வலு சேர்ப்பதே என்று அறிக!
பார்க்க – முகநூல் உரையாடல்