• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / தமிழ்நாட்டில் SBI clerk தேர்வு இடங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?

தமிழ்நாட்டில் SBI clerk தேர்வு இடங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?

July 25, 2019

தமிழ்நாட்டில் SBI clerk தேர்வுக்கு 425 இடங்கள்.

இது எப்படி பிரிக்கப்படுகிறது?

42 இடங்கள் – ஐயர், ஐயங்கார் போன்ற உயர்சாதியினர். (EWS 10%)

31 இடங்கள் – மலைவாழ் பழங்குடி மக்கள் (ST 7.5%)

62 இடங்கள் – பட்டியல் சாதியினர் (SC 15%)

114 இடங்கள் – கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC 27%)

172 இடங்கள் – பொதுப்பிரிவில் திறந்த போட்டி (GEN 40.5%)

நடந்து முடிந்தது Prelims தேர்வு.

எவ்வளவு இடம் காலியாக இருக்கிறதோ, அது போல் பத்து மடங்கு ஆட்களைத் தேர்வு செய்து Mains தேர்வுக்கு அழைக்கிறார்கள்.

Mains தேர்வு எழுதப் போகிறவர்களில்

EWS – 420 பேர் 28.5 மதிப்பெண் மேல் பெற்று உள்ளார்கள்.

ST – 310 பேர் 53.75 மதிப்பெண் மேல் பெற்று உள்ளார்கள்.

SC – 620 பேர்

OBC – 1140 பேர்

GEN – 1720 பேர்

61.25 மதிப்பெண் மேல் பெற்று உள்ளார்கள்.

EWS தவிர்த்துப் பார்த்தால்,

53.75 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் மட்டும் 3790 பேர் இருக்கிறார்கள்.

இத்தனைப் பேர் காத்திருக்கும் போது, ஏன் 28.5 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்த தகுதியே இல்லாத ஐயர், ஐயங்கார் போன்ற 420 பேருக்கு மட்டும் வெற்றிலைப் பாக்கு வைத்து வேலை தர வேண்டும்?

ஓ! சரி! அது தான் 420 என்று சரியாக நம்பர் கொடுத்திருக்கிறார்களோ!

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2306