கேள்வி: தமிழ்நாட்டில் உயர் சாதி ஏழைகளே இல்லையா? ஏன் இந்த வன்மம்?
பதில்:
2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுள் ஒவ்வொரு சாதிப் பிரிவிலும் எத்தனைப் பேர் என்ற விவரத்தை RTI மூலம் பெற்றிருப்பதாக நண்பர் Sankar J தெரிவித்து இருக்கிறார்.
மொத்தம் தேர்வு எழுதிய 9,27,657 பேரில் வெறும் 24,955 பேர் தான் FC பிரிவினர்.
அதாவது 3%.
இந்த 3% பேரில் எத்தனைப் பேர் உண்மையிலேயே ஏழைகள் என்பதற்கு எந்தத் தரவும் இல்லை.
ஒரு பேச்சுக்கு எல்லோரும் ஏழைகள் என்று கொண்டாலும் 3% ஆட்களுக்குப் 10% தூக்கிக் கொடுப்பது என்ன நியாயம்?
மற்ற சாதிப் பிரிவுகளுக்கு எல்லாம் அவர்கள் மக்கள் தொகையை விட குறைவான இடங்கள் தானே வழங்கப்பட்டுள்ளது!
சரி 10% கொடுக்காமல் மக்கள் தொகைக்கு ஏற்ப 3% இடங்களையாவது பிரித்துக் கொடுக்கலாமா?
கூடாது!
ஏன்?
இட ஒதுக்கீடு என்பது இருக்கிற இடங்களைப் பங்கு வைக்கிற ஏற்பாடு அல்ல.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியின் பெயரால் நிகழ்ந்த சமூக அநீதிக்கு வழங்கப்படுகிற நீதி.
எனவே, இந்தக் கொள்கை அடிப்படையை மறந்து விட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப இடங்களைப் பங்கு வைக்கத் தொடங்கினால் சமூக நீதிக் கோட்பாடே நீர்த்துப் போய் விடும்.
பி.கு – ஆர்வம் உள்ளோர் அரசிடம் மீண்டும் இதே தகவலைக் கோரிப் பெற்று உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பார்க்க… முகநூல் உரையாடல்