தமிழ்நாட்டின் சமூகநீதி அடித்தளத்தையே தகர்த்து எறியும் அட்டூழியம்! தயவு செய்து பகிருங்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேளுங்கள்.
தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் பணி நியமன உத்தரவு வந்திருக்கிறது.
நிறைய மதிப்பெண்கள் எடுத்தாலும் தகுதி உள்ள மாணவர்களை பொதுப்போட்டியில் இடம் தராமல், BC, MBC, SC, ST, SCA இடங்களில் நிரப்பி இருக்கிறார்கள்.
இதன் மூலம் 31% பொதுப்போட்டி இடத்தை Forward Caste மொத்தமாக ஸ்வாகா செய்து விட்டார்கள்.
இப்படி பணி பெற்றவர்களில் ஏறத்தாழ 40 பேர் வெளிமாநிலத்தவர். தேர்வு பெற்றவர்கள் பெயர்களைப் பார்த்தாலே தெரியும்.
இதுவரை தமிழ்நாடு மட்டும் தான் இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தி வந்தது.
இப்போது அவற்றை முன்னேறிய சாதியினர் கொள்ளையடிப்பதோடு நில்லாமல் வெளி மாநில ஆட்களுக்கும் திறந்து விட்டிருக்கிறார்கள்.
திமுக, திக மற்றும் சமூகநீதியை வலியுறுத்தும் அமைப்புகள் இவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு வழக்குகளையும் தொடுக்க வேண்டும்.
ஊடகங்களில் உள்ளவர்கள் இதை மாபெரும் பேசுபொருளாக மாற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் இதனைச் செயற்படுத்தி தமிழ்நாட்டைப் பார்ப்பனக் கோட்டையாக மாற்றுவார்கள்.
