தமிழக கல்வித் தரத்தை விமர்சிக்கும் அயோக்கியர்கள் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய புளுகுமூட்டை:
அரசு பள்ளியில் படிப்பவர்கள் மட்டுமே ஏழை. காசுள்ளவர்கள் நாமக்கல் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படித்து மருத்துவப் படிப்புகளை அள்ளுகிறார்கள். நீட் வந்தால் எல்லாருக்கும் இடம் கிடைக்கும் என்றார்கள்.
அரசு பள்ளிகளில் நன்றாகப் படித்து பத்தாம் வகுப்பில் தேர்வான மாணவர்களை அரசே காசு கொடுத்து தனியாரில் படிக்க வைக்கிறது. பல தனியார் பள்ளிகள் இலவசமாகக் கல்வி கொடுத்து இத்தகைய பள்ளிகளில் இருந்து சிறந்த மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். அனிதாவே அப்படிப் படித்தவர் தான். ஆனால், இதை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் தனியார் பள்ளியில் படிக்கும் பணக்காரர்கள் இடங்களை அள்ளுகிறார்கள் என்றார்கள்.
இவர்கள் உண்மையிலேயே பணக்காரர்களா?
தனியார் பள்ளிகளில் படிக்கும் எத்தனையோ பேர் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பிள்ளை படிக்கட்டும் என்று கடன் வாங்கிப் படிக்க வைத்தவர்கள். மோடியின் 10% வரையறைப் படி இவர்கள் எல்லாருமே ஏழைகள் தான்.
ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது?
2018-19 மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், நடப்பு ஆண்டில் +2 முடித்த மாணவர்கள்,
அரசு கல்லூரிகளில்,
04 (அரசாங்க பள்ளிகள்)
03 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )
20 ( தனியார் பள்ளி மாணவர்கள்)
தனியார் கல்லூரிகளில்,
01 (அரசாங்க பள்ளிகள்)
00 (அரசாங்கம் உதவி பெறும் பள்ளிகள் )
03 ( தனியார் பள்ளி மாணவர்கள்)
ஆக மொத்தம் அரசு+தனியார் சேர்த்து
27+04= 31 பேர் படித்துள்ளார்கள்.
ஏழு கோடி மக்கள் தொகை உள்ள மாநிலத்தில்,
அதுவும் இந்தியாவின் தலை சிறந்த மருத்துவக் கட்டமைப்பு உடைய மாநிலத்தில்,
இலட்சக்கணக்கில் +2 படிப்பவர்கள் உள்ள மாநிலத்தில்,
31 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. மற்ற இடங்களை CBSE மாணவர்கள் அள்ளிச் செல்கிறார்கள்.
தனியார் பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பணக்காரனாக இருந்தாலும் இடம் கிடைக்காது.
இது தான் நவீன தீண்டாமை.
இதை விட ஒரு வெட்கக் கேடு உண்டா?
தமிழன் தமிழன் என்று மீசை முறுக்கித் திரிபவன் எல்லாம் தூக்குல தொங்குங்கடா!
பார்க்க… முகநூல் உரையாடல்