• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / தமிழக இட ஒதுக்கீடு விவரம்

தமிழக இட ஒதுக்கீடு விவரம்

October 4, 2018

தமிழக அரசு தரும் இட ஒதுக்கீடு விவரங்கள் இதோ!

* 31% பொதுப்பிரிவு இடங்களுக்கு அனைத்து சாதிகளும் போட்டியிடலாம். பொதுப்பிரிவு இடங்கள் நிரம்பிய பிறகு தான் 69% இட ஒதுக்கீடு தொடங்கும்.

நீங்கள் BC/MBC/SC/ST ஆக இருந்தாலும் 200/200 பெற்றால், பொதுப்பிரிவிலேயே உங்கள் இடம் கணக்கு வைக்கப்படும்.

* பொதுப்பிரிவு இடத்தைத் தான் நீங்கள் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

நீங்கள் 199/200 பெற்று பொதுப்பிரிவு தர வரிசையில் இருக்கிறீர்கள். ஆனால், பொதுப்பிரிவின் கீழ் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் இல்லை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் தான் இடம் இருக்கிறது என்றால், BC/MBC/SC/ST இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி விரும்பிய கல்லூரியில் இடம் பெறலாம்.

நீங்கள் விட்டுக் கொடுக்கும் பொதுப்பிரிவு இடம் இன்னொரு மாணவருக்குப் போகும்.

* SC பிரிவில் கூடுதல் எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர்கள் இருந்தால், 3% உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மேற்பட்டு உள்ள அனைத்து SC இடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம். அதே போல், போதுமான எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர் இல்லாவிட்டால், அந்த இடங்கள் மற்ற SC சாதியினருக்கு வழங்கப்படும்.

* கிறிஸ்தவர்கள் BC பிரிவின் கீழ் வருவார்கள்.

* BC, MBC இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டுமே. இந்திய அளவிலான போட்டிகளில் இவை இரண்டும் OBC என்ற ஒரே கணக்கின் கீழ் வரும்.

* MBC என்பது தனிப்பிரிவு. அது BC பிரிவின் உள் ஒதுக்கீடு கிடையாது.

No automatic alt text available.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு விவரம்

தகவல்:

  •  Reservation policy in Tamilnadu
  • தமிழ்நாட்டில் BC, MBC சாதிகள் பட்டியல்

பார்க்க – முகநூல் உரையாடல்

 

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1521