1997.
Ro Si தனியார் கல்லூரியில் MBBS படிப்பு நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார்.
1. நல்ல பாம்புக்கு ஏன் நல்ல பாம்பு என்று பெயர்?
2. பொள்ளாச்சி சந்தையிலேயே பாடலைப் பாடியது யார்?
என்று இரு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.
ஓர் உயிர் காக்கும் மருத்துவருக்குத் தெரியவேண்டிய இந்த முக்கியமான அறிவு இல்லாததால் MBBS வாய்ப்பை இழக்கிறார்.
என் சித்தப்பா பாலிடெக்னிக்கில் சேரவே பெரிய இடத்து சிபாரிசு எல்லாம் தேடிக் கொண்டு போனதாகச் சொல்வார்.
1990கள் வரையே தொழிற்படிப்புகளில் சேர நேர்காணல் இருந்தது.
அதில் தகுதியான நம்மவர் பலரைக் கழித்து கட்டினார்கள்.
இன்றும் வேலைகளுக்கும் IAS போன்ற தேர்வுகளுக்கும் முயலும் நம் இளைஞர்கள் நேர்காணலில் தான் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இந்த நேர்காணல் முறையை எல்லாம் ஒழித்துக் கட்டி
Single Window Admission என்று சொல்லப்படுகிற Counselling முறையைக் கொண்டு வந்து
எந்தப் பாரபட்சமும், ஊழலும் இன்றி
இலட்சக்கணக்கானவர்களை அவர்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள கல்லூரிப் படிப்பைப் படிக்கவைத்தவர்
கலைஞர்!
பார்க்க… முகநூல் உரையாடல்