இது 355 ஆண்டுகளாகச் சென்னையில் உள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புள்ளிவிவரம்.
இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் ஒவ்வொரு நாளும் ~10,000 பேர் மருத்துவம் பார்க்கிறார்கள். உறுப்பு மாற்று சிகிச்சை உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசம்.
ஒரு AIIMS கட்டும் காசில் இது போல் பத்து மருத்துவமனைகள் கட்டலாம். AIIMSல் மருத்துவம் பார்க்க நீங்கள் காசு கட்ட வேண்டும். அங்கு மாதக் கணக்கில் காத்திருந்து செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சைகளைத் தமிழ்நாட்டில் ஒரு வார காலத்துக்குள் செய்யலாம். ஆனால், AIIMS தான் தரம் என்று பொதுப்புத்தியில் கட்டமைப்பார்கள்.
ஒரே ஒரு உயர்தர கல்லூரி/மருத்துவமனை கட்டுவதற்குப் பதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரிகள்/மருத்துவமனைகள் கட்டி அனைத்து மக்களையும் சென்றடையுமாறு சேவைகளைத் தருவதே திராவிடப் பொருளாதாரம்.
தயவு செய்து, இதை யாராவது மெர்சல் பசங்களுக்குப் புரிய வைக்க வேண்டுகிறேன்.