சில புதிய புரட்சியாளர்கள் கோருவது என்ன?
திராவிட இயக்கத்தவர்கள் திருமாவைக் கொண்டாட வேண்டுமாம். ஆனால், ஆ. ராசாவைக் கொண்டாடக் கூடாதாம்!
என்ன ஒரு வேடிக்கை!
தலித்களுக்குத் திராவிட இயக்கத்தில் வளர்ச்சியும் இல்லை வாய்ப்பும் இல்லை என்ற மாயையை உருவாக்கி,
தலித்களைப் பொது நீரோட்ட அரசியலில் இருந்து தனிமைப்படுத்துவது தான் உங்கள் Agendaவா?
இல்லை, அவர்களை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில் எல்லா சாதிக் கட்சிகளையும் போல் அதிகாரப் பேரம் நடத்துவது தான் உங்கள் செயல் திட்டமா?
இதே ஆ. ராசா பொய்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறை சென்ற போது,
அவரைப் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தையைப் போல் பாதுகாத்து, மீண்டும் MP ஆக்கி, இன்று நாடாளுமன்றக் கொறடாவாக்கி அழகு பார்ப்பது திராவிடம்!
ஆனால், இதே அக்மார்க் தலித் போராளிகள் அன்று அவரை ஏளனம் செய்தார்கள். கொள்ளைக்காரன் என்றார்கள். இன்னும் உச்சக்கட்டமாக, கொள்ளையில் தங்களுக்குப் பங்கு கூட கிடைக்கவில்லை என்கிறார்கள்!
தலித் பிரச்சினைகளைத் தலித்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்களே!
இப்படி ஒரு அவதூறுப் பேச்சை அன்று எந்த தலித் போராளியாவது கண்டித்தாரா?
தலித் ஒருவர் இன்னலுக்கு உள்ளாகும் போது தனக்குப் பிடிக்காத கட்சியில் உள்ளவர் என்பதற்காக கைவிடுகிறார்கள்.
அவரே வெற்றி பெற்ற பிறகு தலித் என்று போர்வையில் உரிமை கொண்டாடுகிறார்கள்.
இது தான் இவர்கள் தலித்களுக்காக களமாடும் இலட்சணமா?
பார்க்க… முகநூல் உரையாடல்