கேள்வி: சமூகநீதி, திராவிடம் பற்றி எவ்வளவு தான் தரவுகளுடன் விளக்கினாலும் என்னுடைய கல்லூரி, பள்ளிக்கூட, அலுவலக நண்பர்கள், உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே?
பதில்: உங்கள் வாட்சப் குழுக்களில் உள்ள 10, 20 பேரை மனம் மாற்ற முயலாதீர்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது விழலுக்கு இறைக்கும் நீர்.
அவர்கள் தங்கள் கருத்துகளை உங்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்வதில்லை. சமூகத்தின் மிகப் பெரிய ஆளுமைகள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அப்படி ஒரு ஆளுமையாக நீங்கள் உருவாக முனையுங்கள். அதற்கு மூடிய குழுக்களில் உங்கள் ஆற்றலை வீணாக்குவதை நிறுத்த வேண்டும்.
நீங்கள் என்ன எழுதினாலும் முகநூல், வலைப்பதிவு, டுவிட்டர் போன்ற பொது வெளிகளில் எழுதுங்கள். அதே உழைப்பு தான். ஆனால், Return on Investment பல மடங்கு இருக்கும்.
உங்கள் பதிவுகளை 1000 பேர் படித்தால், திறந்த மனதுடன் தரவுகளை ஆயக் கூடிய 10 பேராவது நீங்கள் சொல்வதைச் சீர் தூக்கிப் பார்ப்பார்கள்.
ஆயிரம் முட்டாள்களைக் காட்டிலும் இந்த 10 அறிவாளிகள் பல மடங்கு வீரியத்துடன் உங்கள் அரசியல் இலக்குக்கு உதவுவார்கள். இந்த மாற்றம் உங்கள் அரசியல் செயற்பாட்டுக்கு உற்சாகம் அளிக்கும்.
உங்கள் அரசியற் செயற்பாடுகளை மின்னூல், மேடைப் பேச்சு, வீடியோ என்று ஆவணப்படுத்துங்கள். ஒரு துறை வல்லுநராக மாறுங்கள். மிக விரைவில் தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் கூட உங்களை அழைக்கலாம்.
அப்போது உங்கள் நண்பன் உங்களைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்குவான். அவன் மெதுவாத் தான் வருவான். அவனை விட்டு விடுங்கள்
பார்க்க… முகநூல் உரையாடல்