காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா என்கிறார்கள்.
தனியாரை ஒழித்தால் ஒரே தரத்தில் கல்வி கிடைக்கும்.
ஆனால், எல்லாருக்கும் கல்வி கிடைக்காது.
ஆம், காசு இருந்தால் கூட கல்வி கிடைக்காது.
இது என்ன கதையாக இருக்கிறதே என்கிறீர்களா?
இலங்கையில் உயர் கல்வித் துறை எப்படிச் செயற்படுகிறது என்று அங்குள்ள நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
இன்று இந்தியாவிலேயே அதிகம் மக்கள் கல்லூரிக் கல்வி பெறுவதில் தமிழகம் தான் முதலிடம்.
வழக்கம் போல, திராவிடத்தின் இந்தச் சாதனையையும் குற்றமாக்கி, ஏதோ அரசியல்வாதிகளின் இலாப வெறிக்காகத் தனியார் கல்வியை அனுமதித்தது போல் சித்தரிக்கிறார்கள்.
காசு இருந்தாலும் படிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தது வர்ணாசிரமம்.
தனியார் லாப ஒழிப்பு என்ற பெயரில் முன்னெடுக்கப்படுவது உங்களை மீண்டும் வர்ணாசிரமக் காலத்துக்கு இட்டுச் செல்லலாம்.
பார்க்க… முகநூல் உரையாடல்